412மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  (அவன்),  பங்கப்பிரபையில் - பங்கப்பிரபை யென்கிற
நாலாநரகத்தில்,   பருமித்த  - உத்கிருஷ்டமாகிய, கடல்கள் பத்தும் -
பத்துக்   கடல் காலங்களை, பெற்று - தனக்கு ஆயுஷ்யமாகவடைந்து,
நரகத்தின்   - அந்த  நாலாநரகத்தினின்றும், அரிதில் - அருமையாக
(அதாவது :    நீங்கும்    விஷயத்தில்    வெகு பிரயாசையின்பேரில்
ஆயுரவஸானத்து),    போந்து   - அந்நரகாயுஷ்யம்    நீங்கி வந்து,
நால்வகையாழிகாலம் - நாலுவகையான கடற்காலம், திரததாவரத்தில் -
த்ரஸ    ஸ்தாவரங்களில்,   சென்று - அடைந்து சுழன்று, தீயவாம் -
கொடியனவாகிய,    துயரம்  - துன்பங்களை,    உற்று - அடைந்து,
பரதத்தில்  - பரதக்ஷேத்திரத்தில், கச்சையென்னும் - கச்சையென்கின்ற
(பெயருள்ள),  புரத்தின்பால் - பட்டணத்தின் பக்கத்துள்ள குறிச்சியுள்,
வேடனானான் - வேடனாகப் பிறந்தான், எ-று.

     ‘பத்தும்" என்பதில், உம்மை - அசை நிறைப்பொருளது.     (66)

879. தாருண கிரண னென்னும் வேடன்றன் மனைவி தாழ்ந்த
    வாரிணை யனைய கொங்கை மங்கிதன் சிறுவன் மிக்க
    தாருண னாகித் தோன்றித் தலையிலாத் தால துண்டங்
    கூரெரி கவர்ந்த தொப்பான் கொடுமையாற் கனலி யொப்பான்.

     (இ-ள்.)   (அவ்வாறு     வேடனாகப்    பிறந்த     அவன்),
தாருணகிரணனென்னும்   -  தாருணகிரணனென்னும் பெயரையுடைய,
வேடன்   தன் - வேடனுடைய, மனைவி - பெண்சாதியும், தாழ்ந்த -
தொங்கப்பட்ட,  வார் இணையனைய - இரண்டு தோல் துண்டுகளுக்கு
ஒப்பாகிய, கொங்கை - ஸ்தனங்களையுடையவளும், (ஆகிய), மங்கிதன்
- மங்கி யென்பவளுடைய, சிறுவன் - புத்திரனான, மிக்க தாருணனாகி
- அதிதாருணனென்னும்   பெயருடையவனாகி,   தோன்றி - விளங்கி,
(அதாவது :   அவ்வேடனுக்கும்    அவன் மனைவிக்கும் புத்திரனாகி
விளங்கி),  தலையிலா   -  மட்டை முதலியவற்றையுடைய மேற்பாகம்
இல்லாத,   கூர்  எரிகவர்ந்தது - மிகுந்த நெருப்புபற்றிக் கரிந்ததாகிய,
தாலதுண்டம்    -   பனங்கட்டையை,    ஒப்பான் - நிகர்த்தவனாய்
விளங்கினான், (அதாவது :  அந்தக் கரிந்த பனங்கட்டையைப்போன்ற
கரிய    நிறமுடையவனாய்  விளங்கினான், அவன்), கொடுமையால் -
பொல்லாங்குத்    தொழிலினால்,    கனலியொப்பான்  - அக்னிக்குச்
சமானமாவான், எ-று.                                     (67)

880. பாவந்தா னுருவங் கொண்டெவ் வுயிரையும் படுக்க வேண்டிச்
    சாபஞ்செஞ் சரங்க ளேந்தித் திரிகின்ற தனையான் வந்து
    கோபந்தா னாதி யுள்ளான் கொலையிலா னந்தத் தோடும்
    வேபந்தா னுயிர்கட் காக்கி விலங்கன்மே லேறி னானே.

     (இ-ள்.) (அவ்வாறு பிறந்து வளர்ந்திருக்கும்போது),பாவந்தான் -
பாபமே,   உருவங்கொண்டு   - ஒரு   மனித   ரூபத்தைக்கொண்டு,
எவ்வுயிரையும் - எல்லாப்