துள்ளதாகிய, திருமலி - (ஸம்ஸார சுகத்துள் மேலாகிய) செல்வம்
நிறைந்த, சவ்வட்ட சித்தி - ஸர்வார்த்த சித்தியென்னும் அஹமிந்திர
விமானத்தில், புக்கான் - புகுந்து தேவனாகியவதரித்தான், எ-று. (72)
885. முப்பத்து மூன்று தன்னால் முரணிய வாழி காலம்
முப்பத்து மூன்றி யாண்டா யிரமிடை விட்டு முண்ணா
முப்பத்து மூன்று பக்க முயிர்ப்பிடை முடிவு பெற்றான்
முப்பத்து மூன்ற திச்சா ரிணையிலா முனிவன் றானே.
(இ-ள்.) முப்பத்து மூன்று - (ஸர்வதோஷப் பிராயச்சித்தம்)
முப்பத்து மூன்றிலேயும், அதிச்சாரிணையிலா - அதிசாரமில்லாமல்
பாவித்து அனுஷ்டித்த, முனிவன் தான் - வஜ்ராயுத முனிவனானவன்,
(மேற் கூறியபடி அஹமிந்திர லோகத்தில் ஸர்வார்த்தஸித்தி
விமானத்திற்றேவனாகி), முப்பத்துமூன்று பக்கம் இடை -
முப்பத்துமூன்று பக்ஷமாகிய பதினாறரை மாதத்திற்கொருதடவை,
உயிர்ப்பு - உச்வாஸ நிச்சுவாசத்தை யுடையவனாகி, முப்பத்து
மூன்றாயிரமாண்டு - முப்பத்து மூவாயிரம் வருஷகாலம், இடைவிட்டு -
இடையிற் கழிய, உண்ணா - ஆகாரம் உண்டு, (அதாவது :
மனஸாஹார திருப்தனாகி), முப்பத்துமூன்று தன்னால் - முப்பத்து
மூன்றால், முரணிய - குணிக்கப்பட்ட, ஆழிகாலம் - கடற்காலம்
(அதாவது : முப்பத்துமூன்று கடற்காலம்), முடிவு - ஆயுஷ்ய முடிவை,
பெற்றான் - அடைந்தான், எ-று.
‘விட்டு முண்ணா" என்பதில் உம்மை - அசை.
ஸர்வதோஷப் பிராயச்சித்தம் முப்பத்து மூன்றின் விவரங்களை,
ஸர்வதோஷப் பிராயச்சித்த ஆராதனாவிதானமென்னும் நூலில்
பார்த்துக்கொள்க. (73)
886. அவதிதன் விமானத் தின்கீழ் நாழிகை யளவுஞ் செல்லு
முவதிகள் யாது மின்றி யொப்பிலா வுருவத் தாலே
சிவகதி யாரைப் போல வின்பத்துச் செறிந்தி ருந்தான்
றவநெறி நின்ற வீரன் றன்மையா ரறிய வல்லார்.
(இ-ள்.) (இன்னும்), அவதி - அவதிஜ்ஞானமானது, தன் -
தன்னுடைய, விமானத்தின் கீழ் - விமானத்திற்குக் கீழே,
நாழிகையளவும் - த்ரஸநாழிகை பரியந்தம், செல்லும் -
செல்லக்கூடியதாகும், உவதிகள் - ஸ்த்ரீசமூகங்கள், யாதும் - சிறிதும்,
இன்றி - இல்லாமல், ஒப்பிலா - உபமையில்லாத, உருவத்தால் - தேவ
சரீரத்தால், சிவகதியாரைப்போல - பேரின்பமுற்றவர்களுக்கு
ஒருவாறொப்பாக, இன்பத்து - (தனதாயுஷ்யபரியந்தம்) இப்படிப்பட்ட
ஸர்வார்த்தஸித்தி சுகத்தில், செறிந்திருந்தான் - சேர்ந்திருந்தான்,
தவநெறி - தபோநெறியின்படி, |