Meru Mandirapuranam
|
தருமம் ஆதியாய் இப்பாடலில் சாமான்யமாகச் சொல்லப்பட்ட
புத்கலத்தின் விசேஷங்களைப் பதார்த்த சாரமென்னுங் கிரந்தத்தில்
பார்த்துத் தெரிந்து கொள்க. (87)
88. அத்தியா யமூர்த்தியா யளவி றேசியா
யொத்தள வுலகினோடு டுலக லோகமாந்
தத்துவந் தனைச்செய்து தன்ம தன்மமா
மத்திகள் செலவொடு நிலையிற் கேதுவாம்.
(இ-ள்.) அத்தியாய் - அஸ்திஸ்வரூபமாகி, அமூர்த்தியாய் -
அமூர்த்தமாகி, அளவில்தேசியா - அஸங்சியாதப் பிரதேசியாகி,
உலகினோடு - இந்த லோகத்தோடு, ஒத்த அளவு - தாம் பொருந்தி
யிராநின்ற அளவு, உலகம் -லோகமும்,அலோகம் - (தாமில்லாதவிடம்)
அலோகமும், ஆம் - ஆகின்ற, தத்துவமதனை - ஸ்வரூபத்தையும்,
செய்து - உண்டாக்கி (அதாவது : லோகத்தோடு பொருந்திய அளவுடையதாகியும், தாம் உள்ளவரை உலகமும், இல்லாதவிடம்
அலோகமுமாமென்னும் தத்துவத்தை யுடையதாகியும்) தன்ம
தன்மமாமத்திகள் - தர்மாஸ்தி அதர்மாஸ்திகள், செலவொடு - (முன்
சொன்ன ஜீவபுத்கல மிரண்டுக்கும்) செல்கையோடு, நிலையிற்கு - ஸ்திரத்திற்கும், ஏதுவாம் - காரணமாகும் (அதாவது : தர்மாஸ்
திகாயம் செல்கைக்கும், அதர்மாஸ்திகாயம் நிலவரத்திற்கும் ஏதுவாம்),
எ-று. (88)
| |
89. அளவதாம் பொருளுல கத்துக் கில்லையே
லளவிலா காயத்தி லணுக்க ளோடுயி
ரளவளா வின்றியே யகன்று போயபின்
னுளவல கட்டுவீ டுலகத் தோடுமே.
(இ-ள்.) அளவதாம் - அளவையுடைய, பொருள் -
இந்ததர்மாஸ்தி அதர்மாஸ்திகள்,உலகத்துக்கு - இந்த லோகத்தினுக்கு,
இல்லையேல் - இல்லாவிட்டால், அளவில் - அளவில்லாமல் அனந்தமாகிய, ஆகாயத்தில் - ஆகாசத்திலே, அணுக்களோடு -
அணுவர்க்கணைகளாகிய கர்மங்களோடு, உயிர் - சீவனானது,
அளவளாவின்றி - ஒன்றோடொன்று சேர்ந்து பந்தியாமல், அகன்று -
நீங்கிப்போய், போயபின் -அங்ஙனம் சென்ற பிற்பாடு, உலகத்தோடும்
- இந்த லோகமும், கட்டு - பந்தமும், வீடு - மோட்சமும், உளவல - உண்டாகா, (லோகம், சம்சாரம், மோட்சம் இம்மூன்றும் ஒழியும்) எ-று.
(89)
90. அச்சுநீர் தேரொடு மீனை யீர்த்திடும்
அச்சுநீ ரின்றியே தேரு மீன்செலா
வச்சுநீர் போலதன் மத்தி சேறலை
யிச்சையும் முயற்சியு மின்றி யாக்குமே. |
|
|
|