லிருக்கும்) சலஞ்சலமென்னும் சங்குகள், (அப்புதுப்புனலைக்
கண்டதும்), பிரிந்த காதலார் தமை - பிரிந்துபோயிருந்த
ஆசையையுடைய புருஷர்களை, கண்டபோழ்தில் - (வந்துசேரப்)
பார்த்த காலத்தில், அலங்கல் - மாலையை யணிந்திராநின்ற,
குழலினார்போல் - அளகபாரத்தையுடைய ஸ்த்ரீமார்களைப்போல,
அமர்ந்து - அப் புதுப்புனலை மிகவும் விரும்பி, இனிது -
இனிமையாக,ஒழுகும் - செல்கின்ற, நாட்டுள் - (நீர்வளமுள்ள அந்தக்)
கந்திலை யென்னுந் தேசத்தில், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (4)
895. கதலியின் குலைகள் செம்பொற் கொழுங்கனி கான்று நான்று
மதலையைச் செறிந்த வற்றை மயிலன்ன சாய லார்தங்
குதலையம் புதல்வர்க் குண்ணக் கொடுத்தெடுத் துவக்குஞ் செம்பொன்
மதலைய மாட மூதூ ரயோத்திமா நகர மாமே.
(இ-ள்.) (அந்நாட்டின் தலை நகரம்), கதலியின் -
வாழைமரத்தினது, குலைகள் - தார்களானவை, செம்பொன் - சிவந்த
பொன் போன்ற, கொழும் - செழுமை பொருந்திய, கனி - பழங்களை,
கான்று - தோற்றுவித்து, நான்று - தொங்கி, மதலையை -
உப்பரிகைகளினுடைய கொடுங்கைகளில், செறிந்து - சேர, அவற்றை -
அப்பழங்களை, மயிலன்ன - ஆண்மயில் போன்ற, சாயலார் - சரீரச்
சாயலையுடைய ஸ்த்ரீமார்கள், தம் - தங்களுடைய, குதலை - மழலைச்
சொற்களையுடைய, அம் - அழகிய, புதல்வர்க்கு - புத்திரர்களுக்கு,
உண்ண - தின்னும்படி, கொடுத்து - பறித்துக்கொடுத்து, எடுத்து -
அக்குழந்தைகளைத் தூக்கியெடுத்து, உவக்கும் -
சந்தோஷிக்கும்படியான, செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய,
மதலைய - தூண்களையுடையனவாக, மாடம் - உப்பரிகைகளால்
நிறைந்த, மூதூர் - பழமையான ஊராகிய, அயோத்திமாநகரம் ஆம் -
அயோத்திமாநகர மென்னும் பெயருடையதாகும், எ-று.
‘செறிய" என்னும் செயவனெச்சம், ‘செறிந்து" எனச்
செய்தெனெச்ச மாகத் திரிந்து வந்தது. (5)
896. இரவிபோற் றாப தீபத் திளையவர் வதன மென்னு
மரவிந்த மலரத் தோன்று மரசன்றா னருக தாசன்
வரைபுரை மாட மூதூர் மற்றிதற் கிறைவன் றேவி
சுரிகுழற் கருங்கட் செவ்வாய்த் தோகைசுவ் வதையென் பாளாம்.
(இ-ள்.) வரைபுரை - பர்வதம்போல் பெரிதாகிய, மாடம் -
உப்பரிகைகளையுடைய, மூதூரிதற்கு - பெரிதாகிய இந்த அயோத்தி
மாநகரத்திற்கு, இறைவன் - எஜமானானவன், தீபத்து -
பிரகாசத்தையுடைய, இளையவர் - இளமைப் பருவம் |