422மேருமந்தர புராணம்  


 

தினாயுத   ராஜனாயிருந்து  பின்னர்  அச்சுத கல்பத்தையடைந்திருந்த
தேவன், சுற்றிய - சேர்ந்திராநின்ற, காதலால் - வாஞ்சையினால், வந்து
- ஆயுரவஸாநத்துவந்து,  சிறுவனாகித்தோன்ற - புத்திரனாகியவதரிக்க,
வெற்றி     - வெற்றி  பொருந்திய, வேல் - வேலையுடைய, வீரன் -
வீரபுருஷனாகிய   அப்புதல்வனுடைய,     பேரும்      - நாமமும்,
விபீடணனென்று   - விபீஷணனாகுமென்று, சொன்னார்  - பெரியோர்
கூறினார்கள் (அதாவது : நாமகரணஞ் செய்தார்கள்), எ-று.       (8)

899. இராமகே சவர்க ளாகி யெழின்மதி நீல மேகந்
    தராதலத் திழிந்த போல்வார் தருமமும் புகழும் போன்றுங்
    கராமலி கடலி னோத மதியொடு பெருகும் வண்ணம்
    பராபவம் பகைவர்க் காக்கும் படியினால் வளர்வு சென்றார்.

     (இ-ள்.) எழில் - அழகுடன் பிரகாசியாநின்ற, மதி - சந்திரனும்,
நீல    மேகம்    - நீல    நிறத்தையுடைய மேகமும், தராதலத்து -
இப்பூமியில்,   இழிந்த  போல்வார் - இழிந்ததற்கு ஒப்பானவர்களாகிய
இவர்கள்,    (அதாவது :    சந்திரனையும்   மேகத்தையும் போன்ற
நிறத்தினையுடைய    இவர்கள்),  இராம கேசவர்களாகி - இராமனும்
கேசவனுமாகி   (அதாவது : வெண்ணிறமுள்ள வீதபயன் பலராமனைப்
போலவும் நீல நிறத்தையுடைய விபீஷணன் வாசுதேவனைப் போலவும்
ஆகி) தருமமும் புகழும் போன்றும் - தர்மமும் புகழ்ச்சியும் போலவும்,
(அதாவது :   வெண்மையாகச்  சொல்லப்படும் தருமமும் நீல நிறமாக
வர்ணிக்கப்படும்    கீர்த்தியும் போலவும்), கரா - முதலைகள், மலி -
நிறைந்திராநின்ற, கடலின் - ஸமுத்திரத்தினுடைய, ஓதம் - ஜலமானது,
மதியொடு    - பூர்வபட்ச சந்திரனோடு (கூடி), பெருகும் வண்ணம் -
பெருகுகின்ற    விதம்     போலவும்,   (அதாவது : நீலநிறக்கடனீர்
வெண்ணிறச்  சந்திரனோடு சேர்ந்து பொங்குவது போலவும் விளங்கி),
பகைவர்க்கு    - சத்துரு ராஜாக்களுக்கு, பராபவம் - மானபங்கத்தை,
ஆக்கும்படியினால் - உண்டு பண்ணுகின்ற விதத்தினாலும், (அதாவது :
வீரத்தினாலும்), வளர்வு சென்றார் - வளர்ந்தார்கள், எ-று.

     தர்மம்    கீர்த்தி   முதலியவற்றை  நிறபேதத்தால் வர்ணித்தல்
பெரியோர் வழக்கு.                                      (9)

900. குலமலை யிரண்டு போலக் கொற்றவக் குமர ரோங்கி
    நிலமகட் கிறைவ ராக நின்றதம் பகைவன் வெம்பி
    மலைமிசைப் பருதி யோடு மால்கட லிரண்டு வந்து
    நிலமிசைப் பொருவ போன்று நின்றுபோர் தொடங்கி னாரே.

     (இ-ள்.)   கொற்றவக்குமரர் - இந்த இராஜ புத்திரர்களிருவரும்,
குலமலையிரண்டுபோல   - இரண்டு   குலகிரிகளைப்போல,  ஓங்கி -
உயர்ந்து, (இவ்வாறு), நிலம