434மேருமந்தர புராணம்  


 

மத்தோடு    கூடி),     பணிய    -    (அவர்களை),  வணங்கவும்,
விஞ்சைத்தடவரை     யரசர்     - விஜயார்த்த பர்வத வாசிகளாகிய
வித்தியாதர    வரசர்கள்,    ஜம்பத்தஞ்சினுக்கிரட்டி - நூற்றொருபது
பேர்கள்,   தாழ - வணங்கவும், படரொளிபரப்ப - மிகுதியான ஜோதி
விசாலிக்க, விண்ணோர் - கணபத்த தேவாதிபர்கள், எண்ணாயிரவர் -
எட்டாயிரம் பேர்களும், பணிந்தார் - வணங்கினார்கள், எ-று.    (33)

924. யானையின் றொகுதி நாற்பத் திரண்டுநூ றாயிரந்தேர்
    மானமற் றதுவே வாசி யொன்பதின் கோடி காலாட்
    டானுநாற் பத்தி ரண்டு கோடிதா னவர்க டேவர்
    தானமா னங்க ளெண்ணா யிரமறு படையி தாமே.

     (இ-ள்.)     (அப்போது    அந்த        இராமகேசவர்கட்கு
அமைந்திருந்தவை)    யானையின்     -  யானைகளின், தொகுதி -
கணக்கானது,  நாற்பத்திரண்டு நூறாயிரம் - நாற்பத்திரண்டு லக்ஷங்கள்
ஆகும்,    தேர் - ரதங்களுடைய, மானம் - அளவானது, அதுவே -
முன்    சொன்ன    யானைகளின்     கணக்காகிய நாற்பத்திரண்டு
லக்ஷங்களாகிய அதுவேயாகும்,வாசி - குதிரைகள், ஒன்பதின் கோடி -
ஒன்பது    கோடிகளாகும்,  காலாள் தானும் - காலாள்களானவர்கள்,
நாற்பத்திரண்டு கோடி - நாற்பத்திரண்டு கோடிகளாவர், தானவர்கள் -
வித்தியாதரர்களும்,  தேவர் - கணபத்த தேவர்களும், (ஆகிய), தானம்
- இவ்விரு  ஸ்தானங்களின், மானங்கள் - தனித்தனிப் பிராமணங்கள்,
எண்ணாயிரம்  - ஒவ்வொரு வகையிலும் எண்ணாயிரம் பெயர்களாவர்,
அறுபடையிதாமே - இவ்வாறு சொல்லிய இந்தக் கூட்டம் ஷடங்க பல
சேனைகளாம், எ-று.

     மற்று - அசை.                                     (34)

925. ஆழிவேல் தண்டு சங்க மருமணி வில்லு வைவா
     ளேழுமா லிரத னங்க ளேழாயிர மமரர் காப்ப
     மாழைமே கலையின் மாதே வியரெண்ணா யிரத்தி ரட்டி
     வேழமேற் றிறைகொண் டெய்தும் நாடுமே லுரைத்த தாமே.

     (இ-ள்.)   (இவ்வகைப்    படைகளையுடைய     இவர்களுள்
கேசவனாகிய    விபீஷண வாஸுதேவனுக்கு), ஆழி - சக்கராயுதமும்,
வேல்   - வேலாயுதமும், தண்டு - தண்டாயுதமும், சங்கம் - வெற்றிச்
சங்கும்,    அரும் - பெறுதற்கரிதாகிய, மணி - ஜெயகண்டாமணியும்,
வில்லு    -    காண்டீபமும்,   வை - கூர்மை பொருந்திய, வாள் -
வாளாயுதமுமென்னும், ஏழு - ஏழும், மால் - பெரிதாகிய, இரதனங்கள்
- இரத்தினங்களாம்,(இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் பேர்களாக)
ஏழயிரமமரர்   - ஏழாயிரம் வியந்தர தேவர்கள், காப்ப - (இவற்றைக்)
காவல்    செய்ய, மாழை - ஸ்வர்ணத்தினால் செய்த, மேகலையின் -
மேகலாபரணத்தை யணிந்திரா