றளர்வின்றி நிற்பதா காயஞ் சார்வினா
லளவிலாக் காலத்தோ டசீவ னைந்துமே.
(இ-ள்.) அளவின்றி - அளவில்லாமல் (அனந்தமாகி), அத்தியாய்
- அஸ்திஸ்வரூபமாகி, அமூர்த்தியாதியா - அமூர்த்தத்துவம்
அதிசூக்ஷ்மத்துவம் அகுருலகுத்துவம் அவகஹனத்துவம் என்னுங்
குணங்களையுடையதாகி, உளவென்ற - இந்த வுலகத்தில்
உள்ளனவாயிராநின்றனவென்ற, பொருட்கெலாம் - சீவாதி
பொருள்களுக்கெல்லாம், இடம் கொடுத்து - ஸ்தானங் கொடுத்து,
உடன் - அவைகளுடன், தளர்வின்றி - தளர்ச்சியில்லாமல், நிற்பது -
இருப்பது, ஆகாயம் - ஆகாசத்திரவியமாகும்; (இன்னும்) சார்வின் -
இவைகளோடு சேர்ந்த சார்பினையுடைய, அளவிலா - அனந்தமாகிய,
காலத்தோடு - காலத்திரவியத்தோடு, அசீவன் - அசீவபதார்த்தங்கள்,
ஐந்து - ஐந்துவிதமாம், எ-று.
ஆல் - அசை,
அசீவபதார்த்தங்கள்:- புத்கலத்திரவியம், தர்மதிரவியம்,
அதர்மதிரவியம், ஆகாசதிரவியம், காலதிரவியம் என்பன.
அஸ்திகாயம், திரவியம், தத்துவம், பதார்த்தம் என்னும் இவைகளை
பதார்த்த சாரத்தில் முதலில் சொல்லப்பட்டிருக்கும், நவபதார்த்த,
சப்ததத்துவ, ஷட்திரவிய, பஞ்சாஸ்திகாய மென்னும் அதிகாரங்களில்
பார்த்துக்கொள்ளவும். (93)
|
94. கணம்வளி யுயிர்ப்புத் தோவ மிலவமே நாளி மூழ்த்த
மிணையினாள் பக்கந் திங்க ளிருதுவே யயன மாண்டு
பணையுகம் பூவம் பல்ல பவ்வமே யனந்த மீறாக்
கணமுதற் காலபேதஞ் சொல்லுறிற் கால மில்லை.
(இ-ள்.) வியவஹார காலத்தைப்பற்றி ஆராயுமிடத்து) கணம் -
(பரமாணுவினது புடைபெயர்ச்சி அதாவது : அணு, தான் நின்ற
க்ஷேத்திரத்தைக் கடந்து அடுத்த க்ஷேத்திரத்தில் சேரும் நேரமாகிய
சீக்கிரகாலமென்னும்) ஸமயமும், வளி - (அந்த ஸமயம்
அஸங்கியாதங் கொண்டதாகிய) ஆவளியும், உயிர்ப்பு -
(ஆவளியஸங்கியாதங் கொண்டதாகிய) ப்ராணனும், தோவம் -
(ப்ராணன் ஏழுகொண்ட) ஸ்தோகமும், இலவம் - (ஸ்தோகம்
ஏழுகொண்ட) லவமும், நாளி - (லவம் முப்பத்தெட்டரை கொண்ட)
நாழிகையும், மூழ்த்தம் - (நாழிகை இரண்டுகொண்ட) முகூர்த்தமும்,
இணையினாள் - (முப்பது முகூர்த்தங்கொண்ட இரவும், பகலுமாகிய
இரண்டுஞ் சேர்ந்த) ஒரு திவஸமும், பக்கம் - (திவஸம்
பதினைந்துகொண்ட) பக்ஷமும், திங்கள் - (அதன்மேல்) மாஸமும்,
இருது - இருதுவும், அயனம் - அயனமும், ஆண்டு - வருஷமும்,
பணை - (ஐந்து
|