நிரையத்துளறவுரைச்சருக்கம் 441


 

கடலும்,   ஏழு - (மூன்றா நரகத்துக் கீழ்ப்புரையில்) ஏழுகடலும், பத்து
(நாலா நரகத்துக் கீழ்ப்புரையில்) பத்துக்கடலும், ஒருபத்தேழு - (ஐந்தா
நரகத்துக்கீழ்ப்புரையில்)    பதினேழுகடலும்,   இருபத்தீரின் - (ஆறா
நரகத்தின்   கீழ்ப்புரையிலிராநின்ற    நாரகர்களுக்கு) இருபத்திரண்டு
கடலும்,   மூன்றோடு   முப்பான் - (ஏழாநரகத்தில்) முப்பத்து மூன்று
கடலும், நின்ற - நிலைபெற்றிராநின்றன, எ-று.

     ‘இருபத்தீரின்" என்பதில், இன் - சாரியை.                 (8)

வேறு.

938. முதலா நரகத் தின்முதற் புரையிற்
    பதினா யிரமாண் டுகளாஞ் சிறுமை
    விதியான் மிகையா யுகமே லனகீழ்
    பதியார் பரமா யுகமல் லனவாம்.

     (இ-ள்.) முதலா  நரகத்தின் - முதல் நரகத்து, முதற்புரையில் -
முதல்       புரையிலிராநின்ற      நாரகர்களுக்கு,       சிறுமை -
ஜகன்யாயுஷ்யமானது,   பதினாயிரம்    ஆண்டுகளாம் - பதினாயிரம்
வருஷங்களாகும்,   விதியால்   -   கிரமத்தினால்,   மேலன - மேல்
புரையிலுள்ளவர்களின், மிகையாயுகம் - உத்திருஷ்டாயுஷ்யமானது, கீழ்
பதியார்    -    கீழ்    புரையிலுள்ளவர்களுக்கு,  பாமாயுகமல்லன -
உத்கிருஷ்டாயுமல்லாத   ஜகன்யாயுஷ்யமாக,   ஆம் - ஆகும், எ-று.

     உத்கிருஷ்டாயுஷ்யம்   வரிசைக்   கிரமமாய், முதல்  புரையில்
தொண்ணூறாயிரம் வருஷங்களாகும், இரண்டாம்புரையில் தொண்ணூறு
லக்ஷம் வருஷங்களாகும்; மூன்றாம் புரையில் அஸங்கியாத பூர்வகோடி
வருஷங்களாகும்;   நாலாவது     புரையில்     ஒரு       கடலில்
பத்திலொருபாகமாகும்;   ஐந்தாம்   புரையில்  ஒரு  கடலின் பத்துப்
பங்கில் இரண்டு பங்காகும்;ஆறாம்புரையில் பத்தில் மூன்று பங்காகும்;
ஏழாம்புரையில்  பத்தில்  நான்கு பங்காகும்; எட்டாம்  புரையில் ஒரு
கடலில்    பத்தில் ஐந்து பங்காகும்; ஒன்பதாம் புரையில் ஒரு கடலில்
பத்தில் ஆறு பங்கு ஆகும்; பத்தாவது புரையில் ஒரு கடலில் பத்தில்
ஏழுபங்காகும்;பதினொன்றாவது புரையில் ஒரு கடலில் பத்தில் எட்டுப்
பங்காகும்;   பன்னிரண்டாவது புரையில், ஒரு கடலில் பத்தில் ஒன்பது
பங்காகும்; பதின்மூன்றாவது புரையில் ஒரு கடல் சரியாய் ஆகும்.  (9)

939. முழமூன் றுயர்வா முதலாம் புரையின்
    முழமூன் றுவில்லேழ் விரலா றுளகீ
    ழெழுவா யிதைஞ்ஞூ றுவில்லெய் தளவும்
    வழுவா திறுதொ றுமிரட் டியதாம்.