452மேருமந்தர புராணம்  


 

மானது,  கெடும் வண்ணம்  - நீங்கும் விதமாக, அறப்பொருள் - தர்ம
வசனமாகின்ற    தத்துவார்த்தங்களை,   உரைப்பன் - சொல்லுவேன்,
எ-று.                                                  (31)

961. முனைத்துன்மிசை வந்தவர்கண் மேன்முனித லின்றி
    நினைத்திடிது முன்னையென் வினைப்பயன தென்றே
    மனத்தின்மற மேவின்மிகு பாவம்வரும் வந்தா
    லுனைப்பினை விலங்கினிடை யுய்த்திடரை யாக்கும்.

     (இ-ள்.)  உன்   மிசை  - உன் மேல், முனைத்து - கோபித்து,
வந்தவர்கள்    மேல்    -    சண்டைக்கு வந்த நாரகர்களின் மேல்,
முனிதலின்றி - நீ கோபத்தைச் செய்தலின்றி, இது - இத்தன்மையானது,
முன்னை    - பூர்வத்தில்,    என்   - என்னாற்      செய்யப்பட்ட,
வினைப்பயனதென்று    - கர்மோதய   விளைவென்று, நினைத்திடு -
தியானிப்பாயாக,    (அப்படியல்லாமல்),    மனத்தின் - உன்னுடைய
மனதில்,    மறமேவின்   -    பாபகாரணங்களாகிய குரோதாதிகளை
யடைவாயானால்,    (அவ்வந்தரங்க     பரிணாமத்தினால்), மிகு -
மிகுதியாகிய,    பாவம்    - திரவிய பாபகர்ம பிரகிருதிகள், வரும் -
ஆத்மனிடத்தில்   ஆஸ்ரவமாகும், வந்தால் - அப்படி ஆஸ்ரவமாகி
ஆத்மப்  பிரதேசபந்தமும் ஸ்திதிபந்தமுமானால் (அதனால்), உனை -
உன்னை, (அனுபாக    பந்தமாகிய தன்மையாலே), பின்னை - பிறகு,
விலங்கினிடை   -    திரியக்கதியினிடத்தில், உய்த்து - அடைவித்து,
இடரையாக்கும் - துன்பத்தைச் செய்விக்கும், எ-று.            (32)

962. அறிவன்முத லைவர்சர ணம்புகுதி யாயிற்
     பிறவிமறு சுழியின்வழி யொழுகுதல் பிழைத்தி
     கறுவுசெறி வுறுதலொடு வத்துவை யழித்தா
     லிறுதியில்பல் தீவினைக ளெய்தியடு நின்றே.

     (இ-ள்.)அறிவன் முதல் -அருகத்பரமேஷ்டி முதலாகிய, ஐவர் -
பஞ்ச    பரமேஷ்டிகளை,   சரணம் - ரக்ஷணையாக, புகுதியாயில் -
சேர்வாயாகில்,    (அதாவது   பஞ்சபரமேஷ்டிகளைத் தியானித்தால்
அதனாலே),   பிறவி   - ஸம்ஸார சமுத்திரத்தின், மறு - சுழலுகின்ற,
சுழியின்    -    நீர்ச்சுழலினது,    வழி - மார்க்கத்தில், ஒழுகுதல் -
வீழ்கின்றதினின்றும்,     பிழைத்தி    - நீ       நீங்கினவனாவாய்,
(அப்படியில்லாமல்),    கறுவு    - நீங்காத     குரோதாதிகளையும்,
செறிவுறுதலொடு    -    சேர்தலோடு, வத்துவை - ஆத்மத் திரவிய
சுபாவகுணத்தை,  அழித்தால் - கெடுத்தால், (அதனால்), இறுதியில் -
முடிவில்லாத,     பல் - பலவாகிய, தீவினைகள் - திரவிய பாபங்கள்,
எய்தி - ஆத்மனிடத்தில் அடைந்து , நின்று - பந்தித்து நின்று, அடும்
- துக்க பலனை உதிப்பித்து ஆத்மனை வருந்தப்பண்ணும், எ-று. (33)

963. வீட்டினை விளைக்குநல காட்சியினை விட்டிம்
     மோட்டுநர கத்துயர் முழங்கழலின் வீழ்ந்தாய்