454மேருமந்தர புராணம்  


 

    மன்றித்துயர் நீங்குவதற் கார்வமெழு மாகி
    லொன்றுமுனை நின்றுவினை யொறுக்குமினி மிக்கே.

     (இ-ள்.)  இக்கதி   - இந்நரககதியானது, என்று - எப்பொழுது,
நீங்குவதென்று    -    நீங்குவதாகுமென்று,    ஏதம் - வருத்தத்தை,
உறவேண்டா - அடையவேண்டாம், நின்ற - பந்தித்து நின்ற, வினை -
கருமங்களின்    ஸ்திதிகாலமானது, நீங்கிய   கணத்து - முடிவுபெற்ற
நீங்கினகாலத்து, இதுவும் - இக்கதியும், நீங்கும் - நீங்கிவிடும், அன்றி
- அப்படியன்றி,   துயர் - துக்கமானது,    நீங்குவதற்கு    - நீங்கி
விடுவதற்கு,  ஆர்வம் - ஆசையானது, எழுமாகில் - உண்டாகுமாகில்,
உனை - உன்னை, ஒன்றும் - பொருந்தியதாகிய, வினை - கருமங்கள்,
இனி  - இனிமேலும், மிக்கு - அதிகமாக,    நின்று - உதயஞ்செய்து
நின்று, ஒறுக்கும் - வருத்தத்தைச் செய்விக்கும், எ-று.          (36)

966. சென்றதுன தாயுகமுஞ் சிறிதுபெரி தொழிய
    நின்றபெருந் துயரிதுவு நீங்குஞ்சில நாளில்
    வென்றவர்த மறநெறியின் மெய்யுணர்வு காட்சி
    யொன்றியொழு குன்கண்வினை யெட்டுமுடன் கெடுக்கும்.

     (இ-ள்.)   சென்றது   -   இதற்குமுன்  சென்றதாகிய, உனது -
உன்னுடைய,  ஆயுகமும்,   ஆயுஷ்யமும், பெரிதொழிய - அதிகமான
பாகம்  நீங்கிவிட, சிறிது  நின்ற  - இன்னும் சொற்பகால மிருக்கிறது,
சிலநாளில்    - அந்தச்  சொற்ப     காலத்தில், பெருந்துயரிதுவும் -
பெரிதாகிய  இந்நரக  துன்பமும், நீங்கும் நீங்கிவிடும், மெய்யுணர்வு -
ஸம்மியக்ஞானத்திலும்,    காட்சி - ஸம்மியக் தரிசனத்திலும், ஒன்றி -
பொருந்தி,   வென்றவர்தம்   - ஸகல விபாவங்களை ஜயித்திராநின்ற
ஜினேஸ்வரனால்    அருளிச்     செய்யப்பட்ட, அறநெறியின் - தர்ம
மார்க்கத்தில்,   ஒழுகு     -  பாவனை செய்துநடக்கடவாய், (அப்படி
நடப்பாயேயாமாகில்    அப்பாவனையானது), உன்கண் - உன்னிடத்து
பந்தமாகி நின்ற, வினையெட்டும் - அஷ்ட கருமங்களையும், உடன் -
உடனே (அதாவது :    அற்ப காலத்திலே), கெடுக்கும் - நீக்கிவிடும்,
எ-று.                                                  (37)

வேறு.

967. வாளரி யுழுவை வாயின் மதசரி சையி னஞ்சிற்
    சூழெரி யகத்திற் போரிற் சுறாவெறி கடலிற் கானி
    னீளர ணாகி நிற்கு நிரையத்து விழாமற் காக்குங்
    கேளினியறத்தைப் போல கிடைப்பதொன் றில்லை கண்டாய்.

     (இ-ள்.)  வாளரி  - பிரகரசம் பொருந்திய சிம்மத்தினிடத்திலும்,
உழுவை   வாயின் - புலியினுடைய வாயிலும், மதகரிகையின் - மதம்
பொருந்திய யானையி