பதினொன்றாவது :
பிறவிமுடிச்சருக்கம்
970. நிறைபொறை சாந்தி யோம்பி நின்றதொன் றின்மை சிந்தித்
தறிவன சரண மூழ்கி யாருயிர்க் கருளி யந்தப்
பிறவியி னொருவிச் சித்த விரதம்பெ யிரும்பிற் பெற்ற
வறநெறி யதனின் வந்திங் கரசிளங் குமர னானான்.
(இ-ள்.) (நான் அவ்வாறு வந்தபின் அவன்), நிறை - மனோ
நிறைவு பெற்ற, பொறை - க்ஷமையும், சாந்தி - உபசம பரிணதியும்,
(ஆகிய சுபோபயோக குணங்களை), ஓம்பி - ரக்ஷித்து,
நின்றதொன்றின்மை - ஸம்ஸார சுக துக்கங்களில் யாதொன்றும் நிலை
நில்லாத அனித்திய ஸ்வரூபத்தை, சிந்தித்து - தியானித்து, அறிவன
சரணம் - அருகபரனது பாதங்களில், மூழ்கி - படிந்து (அதாவது :
அருகத்பத்தி பரவசனாகி) ஆர் - நிறைந்திராநின்ற, உயிர்க்கு -
ஸகலஜீவன்களுக்கும், அருளி - காருண்யத்தைச் செய்து, சித்த விரதம்
- ஸித்தரஸத்தை, பெய் - சேர்க்கப்பெற்ற, இரும்பில் - அயமானது
பிரகாசமானதுபோல, பெற்ற - அடையப்பட்ட, அறநெறியதனில் - தர்ம
வழியினாலே, அந்தப் பிறவியின் - அந் நரகஜன்மத்தினின்றும், ஒருவி
- நீங்கி, இங்கு வந்து - இப்பூமியில் வந்து, அரசிளங்குமரன் -
ராஜபுத்திரனாக, ஆனான் - அவதரித்தான்,
எ-று. (1)
971. மற்றிந்தத் தீபத் தின்க ணிரேவதத் தயோத்தி யாளுங்
கொற்றவன் சிரிவம் மாவின் காதலி சுசிமைக் கொம்பின்
பெற்றியாள் வயிற்றுச் சீதா மாவெனுஞ் சிறுவ னாகிக்
கொற்றவர் குலங்க ளென்னுங் குலமலை விளக்கை யொத்தான்.
(இ-ள்.) (அங்ஙனம் அவதரித்தவன்), மற்று - பின்னை, இந்தத்
தீபத்தின் கண் - இந்த மத்திமலோக ஜம்பூத்வீபத்தில், ரேவதத்து -
ஐராவதக்ஷேத்திரத்தில், அயோத்தி - அயோத்தியென்கிற நகரத்தை,
ஆளும் - ஆள்கின்ற, கொற்றவன் - அரசனாகிய, சிரிவம்மாவின் -
ஸ்ரீவர்மா வென்பவனுடைய, காதலி - வாஞ்சையையுடைய
பட்டத்தரசியான, கொம்பின் - புஷ்பக் கொம்பினது, பெற்றியாள் -
தன்மையையுடையவளாகிய, சுசிமை - ஸுஸிமாவென்பவளது, வயிற்று -
கர்ப்பத்திலே யடைந்து, சீதாமாவெனும் - ஸ்ரீதாமாவென்னும்
நாமமுடைய, சிறுவனாகி - புத்திரனாகி, கொற்றவர் - அரசர்களுடைய,
குலங்களென்னும் - குலங்க |