974. அந்தமில் வினைக்கு மாறா மனந்தமா முனிவன் பாதம்
வந்தவன் வணங்கி மாற்றின் வடிவெலா முடியக் கேட்டிட்
டிந்திர விபவந் தன்னை யெரியுறு சருகி னீக்கி
வெந்திறல் வேந்தர் வீரன் மெய்த்தவத் தரச னானான்.
(இ-ள்.) அந்த மில் - அழகில்லாத (அதாவது : ஆத்மகுண
காதங்களான), வினைக்கு - வினைகளுக்கு, மாறாம் - எதிராகி,
(அவ்வினைகளைக் கெடுக்கும்படியான), அனந்தம் - முடிவில்லாத
ஸம்மியக்ஞானாதி குணங்களையுடைய, மா - பெருமை பொருந்திய,
முனிவன் - ஒரு முனிவரனுடைய, பாதம் - சரணங்களில், வந்து -
வந்து அடைந்து, அவன் - அந்த ஸ்ரீதாமாவானவன், வணங்கி -
நமஸ்காராதிகளால் வணங்கி, மாற்றின் - ஸம்ஸாரத்தினுடைய,
வடிவெலாம் - ஸ்வரூபங்களையெல்லாம், முடிய - முழுமையும்,
கேட்டிட்டு - அவரால் சொல்லக்கேட்டு, இந்திர விபவந்தன்னை -
தேவேந்திர வைபவம் போன்ற ராஜ்ய போகத்தை, எரியுறு -
அக்கினியிடத்தடைந்த, சருகின் - உலர்ந்த சருகிலை பஸ்மமாகி
ஒன்றுமில்லாமற்போவதுபோல, நீக்கி - தனக்கு யாதொரு
சம்பந்தமுமின்றி வைராக்கிய பாவனாக்கினியால் நீக்கி, வெம் -
வெப்பம் பொருந்திய, திறல் - பராக்கிரமமுள்ள, வேந்தர் -
ராஜாக்களுக் கெல்லாம், வீரன் - வீரனாகிய, (ஸ்ரீ தாமாவானவன்),
மெய்த்தவத்து - உண்மையாகிய தபஸுக்கு, அரசனானான்-
ராஜவானான், எ-று.
இங்ஙனம் கூறியதனால் அவன் ஜினதீக்ஷையைக் கை்கொண்டான்
என்பது பெறப்படும். (5)
975. யோகங்கண் மூன்றுஞ் சிந்தை யுடன்செல வடங்கி யூற்று
மோகங்கண் முதுகிட் டோட முனிமையை முகடு கொண்டு
நாகங்க ணடுங்க நோற்றா ராதனை நான்கி னீங்கிப்
போகங்கள் புகழ லாற்றா பம்மனற் கற்பம் புக்கான்.
(இ-ள்.) (அங்ஙனம் ஜினதீக்ஷையைக்கொண்ட அவன்),
யோகங்கள் மூன்றும் - மனவசனகாயங்கள் மூன்றையும், சிந்தையுடன்
- தர்மத்தியானத்துடனே (கூடி), செல - செல்லும்படி, அடங்கி -
அடக்கமுற்று (அதாவது : பிராணி ஸம்யமம் விஷய ஸம்யமங்களில்
பொருந்தி, ஸம்மியக்ஞான பாவனையால்), மோகங்கள் - மோஹனீய
கருமங்களின், ஊற்று - அஸ்ரவமானது, முதுகிட்டோட - பின்னிட்டு
நீங்க, முனிமையை - முனிவரனாந்தன்மையை, முகடு கொண்டு -
மேலாகக்கொண்டு, நரகங்கள் - தேவலோகத்திலுள்ள
தேவர்களெல்லாம், நடுங்க - (இவரே மேலான ஸம்மியக்ஞானியென்று
பயபக்தியினால்) நடுங்கி வணங்கும்படி, நோற்று - தபஞ்செய்து,
ஆராதனை நான்கின் - சதுர்வித ஆராதனாதியானத்தால், நீங்கி -
சரீர நீங்கி, போகங்கள் - போகோபபோக ஸௌக்கியங்களில் |