462மேருமந்தர புராணம்  


 

அதிதாருணனாகிய  வேடன், தீவினை  - பாபவினையானது, துரப்ப -
துரத்த,    மாகவிசென்று    - அவ்வேடனாகிய   பரியாயம்   நீங்கி
மாகவியென்னும்    ஏழாநரகத்தையடைந்து,   பெற்ற - அந்நரகத்தில்
தனக்கு ஸ்திதியாகப் பெற்ற, ஆயுவும் - ஆயுஷ்யகாலமும், கழிந்து -
நீங்கி,   மண்மேல் - இப்பூமியின்மேல், நரகத்தில் - ஸர்ப்ப பிறப்பில்,
தோன்றி    -   பிறந்து, தீமை    வேகத்தில்   -  பொல்லாங்காகிய
தீவிரபரிணாமத்தினால்,    மூன்றாநரகத்துப்   புக்கு   -  மறுபடியும்
மூன்றாவது  நரகத்தையடைந்து மறுபடியும், விலங்கில் - திரஸஸ்தாவர
விலங்குகளெல்லாவற்றிலும்,      (தோன்றி),   ஐந்து  பொறியுளும் -
பஞ்சேந்திரியங்களிலும்,    சுழன்று   -     சுழற்சியுற்று, செல்வான்-
செல்பவனாய், எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                    (10)

980. வந்திந்தப் பரதத் தின்கண் பூதர மணவ னத்தி
    னந்தரத் தணியிற் செல்லும் நதியயி ராவ தியின்
    றன்கரைத் தாப தற்குத் தலைவன்கோ சிருங்கன் பன்னி
    மந்தஞ்சேர் சங்கி மைந்தன் சிருங்கஞ்சேர் மிருக னானான்.

     (இ-ள்.) இந்தப்    பரதத்தின்கண்   - இந்த      ஜம்பூத்வீப்
பரதக்ஷேத்திரத்து,   பூதரமண   வனத்தில்    -  பூதரமணமென்னும்
காட்டினுடைய,   அந்தரத்து    - மத்தியில்,   அணியில் - அழகாக,
செல்லும் - செல்கின்ற, அயிராவதி நதியின் தன் -. ஜராவதியென்னும்
பெயருள்ள ஆற்றினுடைய, கரை - கரையில் இராநின்ற, தாபதர்க்கு -
தாபஸர்களுக்கு,    தலைவன்    - தலைவனான,   கோசிருங்கன் -
கோஸ்ரீங்கன்  என்னும் பெயருடையவனது, பன்னி  - பெண்சாதியான,
மந்தஞ்    சேர்    -  மந்தபுத்தியையுடைய, சங்கி  - சங்கியென்னும்
பெயருடையவளுக்கு,   மைந்தன்   -  புத்திரனாக, வந்து - தோன்றி,
சிருங்கம்   சேர்   -   ஸ்ரீங்கம்    என்கிற   பதத்தைக் கடைசியிற்
சேர்ந்திராநின்ற, மிருகன்- மிருகன் என்று (அதாவது : மருக ஸ்ரீங்கன்
என்னும் நாமமுடையவனாக), ஆனான் - ஆகினான், எ-று.      (11)

981. பரல்மிசைக் கிடந்தும் முள்ளின் பலகையிற் றுயின்றும் பஞ்ச
    வெரிநடுப் பகலி னின்று மிராவகம் வருடம் புக்குங்
    கரையுடை மடையிற் சேர்ந்துங் கலையின்பின் னோடிக் காமத்
    துரையுடை யவரிற் சீத குடங்களைத் தழுவித் தோளால்.

     (இ-ள்.) (அவன்   அவ்வாறு  பிறந்து), பரல்மிசை - பருக்கைக்
கற்களின்மேல், கிடந்தும் - தங்கியும், (அதாவது : படுத்தும்), முள்ளின்
பலகை - இருப்பு முட்களை மேல் மட்டம் சமனாகச் செய்து நிறையத்
தைத்திராநின்ற   பலகையில்,    துயின்றும் - நித்திரை செய்தும், நடு
பகலில் - மத்தியான காலத்தில், பஞ்சவெரி நின்று - பஞ்சாக்கினியின்
மத்தியில் நின்றும், இராவகம் - நடு இராத்திரியில்