பிறவிமுடிச்சருக்கம் 463


 

வருடம் புக்கும் - மழை பெய்தால் அதில் நின்று நனைந்தும், (அப்படி
மழை பொழியாவிட்டால்), கரையுடை மடையில் - உடைகரை வழியாக
அல்லது    ஜலப்போக்கு வழியாக நீர் பற்றாமல் செல்கின்ற இடத்தில்
ஜலத்திலே,   சேர்ந்தும் - அடைந்து நின்றும், கலையின் பின் - மான்
கூட்டங்களினது  பின்னால், ஓடி - ஓட்டம் பிடித்தோடியும், காமத்து -
காமராகத்தின்,     உரையுடயவரில் - புகழ்ச்சியுடையவர்களைப்போல,
(குளிர் காலங்களில்), சீதகுடங்களை - குளிர்ச்சியாகிய நீர்க்குடங்களை,
தோளால் - கைகளால், தழுவி - தழுவியும், எ-று.              (12)

982. தூங்குறிக் கிடந்தும் நல்லார் தோளினைப் புணர்ந்துந் தூய்மை
    வாங்கிய தவத்திற் செல்வான் வானத்தோர் விஞ்சை வேந்தன்
    தீங்கிலா விஞ்சு மாலி திவிதில கத்து நாதன்
    ஆங்குவந் தவனைக் கண்டாங் கண்ணைதா னிதானஞ் செய்தான்.

     (இ-ள்.)   தூங்கும்   -   தொங்கும்படியான,  உறி - உறியில்,
கிடந்தும்    -    உட்கார்ந்திருந்தும்,  நல்லார் - ஸ்த்ரீமார்களுடைய,
தோளினை    -    தோள்களை,   புணர்ந்தும் - காமத்தால் தழுவிச்
சேர்ந்தும்,   தூய்மை   வாங்கிய   -  பரிசுத்தமில்லாத  (அதாவது :
ஹேயோபாதேய   தத்துவார்த்த    ஸ்ரீத்தான ரஹிதமாகிய அதாவது :
ஸம்மியக்தர்சன ஹீனமாகி மூடமாகிய), தவத்தில் - தபஸில், செல்வான்
- செல்கின்றவனானான், (அவ்வாறு  சென்ற இத்தாபஸன்), வானத்து -
ஆகாயமார்க்கமாக,   ஆங்கு   வந்தவன்   - அங்கு  வந்தவனாகிய,
திவிதிலகத்து    -   திவிதிலகமென்னும்   பட்டணத்துக்கு,  நாதன் -
எஜமானாகிய,    தீங்கிலா   -    நன்மையான  குணங்களையுடைய,
விஞ்சுமாலி    - வித்யுன்மாலியென்னும்   பெயருடைய, ஓர் விஞ்சை
வேந்தன்    - ஓர்  வித்தியாதரவரசனை, கண்டு - பார்த்து, ஆங்கு -
அவ்விடத்திலேயே,  அண்ணை தான் - முன்னர் மூடமான தவத்தைச்
செய்தவனாகிய   தான்,   நிதானஞ்   செய்தான்   -  நிதானத்தைப்
பண்ணினான், எ-று.                                      (13)

983. மற்றிவன் றனக்குப் போனற் றவத்தின்மே லெனக்கு வந்திச்
    சுற்றமுஞ் செலவு வேந்துந் தொக்குட னிற்க வென்றிப்
    பெற்றியை நினத்துச் சென்றப் பிறப்பின்க ணீங்கி வெள்ளி
    வெற்பின்கண் வடக்கிற் சேடி கனகபல் லவத்து வேந்தன்.

     (இ-ள்.) (அவ்வாறு   நிதானம்  பண்ணத் தொடங்கிய அவன்),
இவன்  தனக்குப்போல் - இவ்வித்தியாதரனுக்குண்டான விபவம்போல,
நற்றவத்தின்   - என்னாற் செய்யப்பட்ட நல்ல தவத்தினாலே, மேல் -
மறு    ஜன்மத்தில், எனக்கு   -   எனக்கு, சுற்றமும் - பந்துக்களும்,
செலவும் - ஆகாய கமனமும், வேந்தும் - இராஜத்துவமும், தொக்கு -
சேர்ந்து,  வந்து - வந்து சேர்ந்து, உடன் - என்னுடன், நிற்கவென்று -
பொருந்தி   நிற்கவென்று,   இப்பெற்றியை   - இந்த  எண்ணமாகிய
நிதானத்தை, நினைத்து - தியானித்து, சென்று - தபஸில் சென்று, அப்