பிறப்பின்கண் - அந்தத் தபாதனாகிய ஜன்மத்து நின்றும், நீங்கி -
ஆயுஷ்யாவஸாநத்தில் நீங்கி, வெள்ளி வெற்பின் கண் - விஜயார்த்த
பர்வதத்தில், வடக்கில் சேணி - உத்தரபேஸ்ரீணியில் இராநின்ற, கனக
பல்லவத்து - கனக பல்லவம் என்கிற பட்டணத்துக்கு, வேந்தன் -
அரசனாகிய, எ-று.
மற்று - அசை. இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (14)
984. வச்சிர தந்த னுக்கும் மாதர்வித் துப்பிர பைக்கு
மிச்சையாற் றோன்றி வித்துத் தந்தனென் றியம்பப் பட்டான்
வச்சிரப் பிளவு போலும் வேரத்தால் வந்த பாவத்
திச்செய்கை முனிக்குச் செய்தா னிவனந்த வமைச்சன் கண்டாய்.
(இ-ள்.) வச்சிரதந்தனுக்கும் - வஜ்ரதந்த னென்னும்
அரசனுக்கும், மாதர்வித்துப் பிரபைக்கும் - அவனுடைய பெண்சாதி
வித்யுத்பிரபை யென்பவளுக்கும், இச்சையால் - ஆசையால், தோன்றி
- (பிள்ளையாகப்) பிறந்து, வித்துத்தந்தனென்று - வித்யுத்தம்ஷ்ட்ரன்
என்று, இயம்பப்பட்டான் - யாவராலும் பெயர்
சொல்லப்பட்டவனானான், வச்சிரப்பிளவுபோலும் - வஜ்ரக்
கற்பிளப்புப்போலும், வேரத்தால் - வைரபாவத்தால், வந்த -
உண்டாகிய, பாவத்து - பாபகர்மோதயத்தால், முனிக்கு - இந்தச்
சஞ்சயந்த முனிவரனுக்கு, இச்செய்கை - இவ்விதமாகிய
உபசருக்கங்களை, செய்தான் - பண்ணினான், இவன் - இந்த வித்துத்
தந்தன், அந்த அமைச்சன் - (ஆதியில் ஸிம்மஸேன மஹாராஜனுடைய
மந்திரியாகிய ஸ்ரீபூதியென்கிற) அந்த மந்திரியாகும், கண்டாய் -
தரணேந்திரனே! நீ தெரிந்து கொண்டனையா?, எ-று. (15)
985. வேரத்தால் வேந்தற் கென்றும் பகைவனாய் வெய்ய துன்பப்
பாரத்தை முடியச் சென்றான் பகைவனாய்த் தனக்குத் தானே
வேரத்தை யொன்று மின்றி வேந்தனும் வீட்டி லின்பப்
பாரத்தை முடியச் சென்றான் பன்னகர்க் கிறைவ வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும் அவனை நோக்கி),
பன்னகர்க்கு இறைவ - பவணதேவர்களுக் கதிபதியாகிய
தரணேந்திரனே!, வேரத்தால் - வைரபாவத்தால், வேந்தற்கு -
சிம்மஸேன மஹாராஜனுக்கு, என்றும் - எப்போதும், பகைவனாய் -
(ஸ்ரீபூதியாகிய மந்திரியானவன்) சத்துருவாகி, (அப்பரிணாமத்தால்),
தனக்குத்தானே - தன்னுடைய ஆத்மனுக்குத்தானே, பகைவனாய் -
பாபகருமங்களை உண்டுபண்ணிக்கொள்ளும் சத்துருவாகி, (அதனால்),
வெய்ய - வெப்பம் பொருந்திய, துன்பபாரத்தை - துக்க ஸமூஹ
சுமையில், முடிய - முழுதிலும், சென்றான் -அடைந்தான், (அதாவது :
நரககதி துன்பம் விலங்குகதி துன்பங்களில் மிகுதியானவற்றை
யெல்லாம் அனுபவித்தான்), வேரத்தை - வைர |