468மேருமந்தர புராணம்  


 

    யெவ்வழி யானு மோடி யெளியவர் தம்மை யெல்லாங்
    கவ்வைகள் பலவுஞ் செய்வர் மேல்வருங் காலத் தென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொல்லிப்   பின்னரும்), இவ்வண்ணம் -
இப்பிரகாரம்,   செய்திடேனேல்  - செய்யாமற்  போவேனேயாமாகில்,
இருள்பிழம்பு  - அந்தகார  புஞ்சமானது, இரண்டு  மின்னு - இரண்டு
மின்னற்கொடிகளை, கவ்வியதனைய  - சேர்ந்ததற்குச்   சமானமாகிய,
மேனி    -   இரண்டு   கோர    தந்தங்கள்   பொருந்திய  கறுத்த
சரீரத்தையுடைய, கடையர்  - கீழோராகிய இவ்வத்தியாதரர்கள், தம் -
தங்களுடைய, களிப்பினாலே  - சந்தோஷத்தினாலே, எவ்வழியானும் -
எந்தத்திக்கிலாகிலும்,   ஓடி - சென்று, எளியவர் தம்மை யெல்லாம் -
எளிய   மனுஷ்யர்களுக்கெல்லாம்,    மேல்வருங்காலத்து - இனிமேல்
வருங்காலத்தில், கவ்வைகள்  பலவும் -  பலவாகிய உபசருக்கங்களை,
செய்வர் - செய்வார்கள், என்றான் - என்று சொன்னான், எ-று.   (23)

993. மௌவலங் குழலி னாரும் மாவிஞ்சை யடிப்ப டுப்பார்
    செவ்வியாஞ் சஞ்ச யந்தன் றிருவடிக் கமலஞ் சேர்ந்தங்
    கவ்விய மின்றி நின்று சிறப்பயர்ந் தோதி னல்லா
    லெவ்வகை விஞ்சை யேனு மெதிர்வர லொழிக வென்றான்.

     (இ-ள்.) (அவ்வாறு  சொல்லிப் பின்னர்), மௌவல் - முல்லைப்
புஷ்பங்களை   யணிந்த,   அம்   -   அழகிய,     குழலினாரும் -
அளகபாரத்தையுடைய   ஸ்த்ரீமார்களும்,   செவ்வியாம்   -    சுத்த
ஸ்வரூபமுடைய,    சஞ்சயந்தன்    - சஞ்சயந்த   பட்டாரகருடைய,
திருவடிகமலம்   - அழகிய   பாத     தாமரைகளை,    சேர்ந்து -
நமஸ்கரித்தடைந்து,   அங்கு  - அவ்விடத்திலேயே, அவ்வியமின்றி -
வஞ்சனை    பொறாமை    முதலாகிய துர்க்குணங்களின்றி, நின்று -
சுபத்தியானத்துடன்    கூடி     நின்று, சிறப்பு - அருகத் பரமேசுவர
பூஜையை,    அயர்ந்து - மங்கலார்த்தமாகச் செய்து, ஓதின் - வித்யா
மந்திரங்களை  ஓதுவார்களேயானால், மாவிஞ்சை - மஹா வித்தையை,
அடிப்படுப்பார்   -    தங்கள்    வசப்படுத்துவார்கள்,  அல்லால் -
அப்படியல்லாமல்,   எவ்வகை    விஞ்சையேனும்  - எந்த விதமான
வித்தைகளாயிருந்த   போழ்திலும்,   (அவற்றில்), எதிர்வரல் ஒழிக -
அபிமுகமாகாமல்   நீங்கக்கடவீராக,   என்றான்   - என்று (வித்யா
தேவதைகளுக்கு) ஆக்ஞாபித்தான், எ-று.

     ‘செவ்வியற்சஞ்சயந்தன்" என்றும் பாடபேத முணடு.       (24)

994. தரைமக டிலக மன்ன தடவரை யிதன்கண் மேனாட்
    பிரமரி முதல விஞ்சை யடிபடப் பிணைய னாருக்
    1கிரிமந்தா னிக்கு லத்து மைந்தர்க்கா கென்றி தன்பே
    ரிரிமந்த மென்றோர் குன்றி னிறைவனா லயஞ்ச மைத்தான்.