யாகிய, புண்ணியம் - புண்ணியாஸ்வரமென்றும், பாவம் -
பாபாஸ்ரவமென்றும், தவியம் - திரவியாஸ்ரவமென்றும்,பாவம் என்று
- பரிணாமாஸ்ரவமென்றும், எலாவுயிர்க்கும் - ஸம்சார
சீவன்களெல்லாவற்றிற்கும், ஆகும் - ஆகாநின்ற, இவைதாம்
- இவ்வாஸ்ரவங்கள், பத்தாகும் - பத்து விதங்களாகும், எ-று.
இன்னும் விரிவாக இவ்வாஸ்ரவ பேதங்களை பதார்த்த சாரத்தில்
கண்டு கொள்ளலாம். தான் - அசை. (98)
99. கோபனஞ் சமிதி தம்மஞ் சிந்தையீ ராற டக்கந்
தாபனம் பரிசை வெல்லுந் தன்மையான் முனிவ னின்றால்
வேபமொன் றிலாத சிந்தை வினைவழி விலக்கி நிற்குந்
தீபநின் றகத்தைச் சேரு மிருளுண்டோ செறிப்பி தாமே.
(இ-ள்.) கோபனம் - திரிகுப்தியும், சமிதி - பஞ்சசமிதியும்,
தம்மம் - தசதர்மமும், சிந்தை - த்வாதசானுப்பிரேட்சையும்,
ஈராறடக்கம் - த்வாதசஸம்யமும், தாபனம் - த்வாதசதபமும்,
(உடையவராய்), பரிசை - த்வாவிம்சதி பரீஷஹங்களை, வெல்லும்
தன்மையால் - ஜெயிக்கும் ஸ்வாபமுமாகிய இவற்றோடு, முனிவன் -
ஒரு முனீஸ்வரன், நின்றால் - (வீதராக சுத்தோப யோகமாகிய
தியானத்தில்) நின்றால், வேபமொன்றிலாத - சலனமில்லாத, சிந்தை -
அந்தத் தியானமானது, வினைவழி - கருமங்கள் வரும் வழியை,
விலக்கி நிற்கும் - தடைசெய்து நிற்கும், தீபநின்ற அகத்தை -
தீபமானது இராநின்ற விடத்தில், சேருமிருளுண்டோ - அந்தகாரம்
சேருமோ? (சேராது), செறிப்பு - ஸம்வரபதார்த்த சேர்க்கையானது,
இதாம் - இதுவாம், எ-று.
குப்தி, சமிதி, தர்மம், அனுப்ரேட்சை, த்வாதச ஸம்யமம்
ஆகியவைகளின் விவரங்கள் இப்புராணத்தில் 13-வது சமவசரண
சருக்கத்தில் மேரு மந்தரர்கள் தபத்திலும், த்வாதசதபசு நான்காவது
பூர்ண சந்திரன் அரசியற் சருக்கத்தில் சிம்மசந்திரர் தபத்திலும்,
பரீஷஹங்களின் விவரம் 7-வது சக்கராயுதன் முக்திச் சருக்கத்தில்
சக்கராயுதன் தபத்திலும் விளங்கும். (99)
|
100. நின்றவந் தத்தின் மூன்று நினைப்புணர் வுதிர்ப்பை யாக்கு
முன்புசென் றுயிர்க்கணின்ற வினையின்கண் மூழ்த்த மாதி
நின்றவத் திதியி னோடு பயன்செய்யு மாற்ற லுய்க்கு
மொன்றிய வகையி னாலே கணந்தொறு முருவத்தாரோய்.
(இ-ள்.) உருவம் - ரூபம் பொருந்திய, தாரோய் - மாலையை யணிந்திரா நின்ற வைஜயந்த மகாராஜனே! நின்ற - முன்பாடலில்
சொல்லியிராநின்ற, அந்தத்தின் மூன்று - அந்தியத்தில் உள்ள
த்வாதசஸம்யமம் த்வாதசதபம் பரீஷஹஜயம் ஆகியவைகளும்,
நினைப்பு - தருமத்தியான சுக்கிலத்தியானங்
|