470மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) (அவ்வாறியற்றிச்  சிறப்புச்செய்யத்  தொடங்கினபோது),
முழவு    - மத்தளங்களும், தண்ணுமை - பேரிகைகளும், மொந்தை -
ஒர்கட்பறையும்,   முழை   மழையின்  - இருளோடுகூடி சப்திக்கின்ற
மேகத்தைப்போல,   முழங்கின    -  அக்கோவிலுக்குள்  சப்தித்தன,
வலம்புரி   - வலம்புரிச் சங்குகளும், முரன்ற - முழங்கின, காகளம் -
எக்காளங்கள்,  கழல   நின்று  - வெளியாகத் தொனிபுறப்பட நின்று,
அழைத்திட்டன     -    கூவித்     தொனித்தன,     குழலோடு -
புள்ளாங்குழல்களோடு,  வீணைக்குழாங்கள்  - வீணை ஸமூஹங்களும்,
ஏங்கின - சப்தித்தன, எ-று.                                (27)

997. நிரந்த கின்னரர் கீத நிலமிசை
    யரம்பை யர்மின்னி னெங்கணு மாடினார்
    சுரந்த காதலிற் சொற்றழ காகநற்
    கரங்கு வித்துர கர்க்கிறை யேத்தினான்.

     (இ-ள்.)  (இன்னும்),   நிலமிசை    -    பூமிமேல்,    (வந்து
அச்சிறப்பிற்குக் கூடிய), கின்னரர் - கின்னர தேவர்களுடைய, கீதம் -
இசையானவை,    நிரந்த    - வரிசையாக அமைந்தன, எங்கணும் -
எவ்விடங்களிலும்,   மின்னின்   -    மின்னற்    கொடியைப்போல்,
அரம்பையர்  - தேவநர்த்தகிகள், ஆடினர் - நர்த்தனஞ் செய்தார்கள்,
உரகர்க்கு    -   பவண    தேவர்களுக்கு,   இறை - இறைவனாகிய
தரணேந்திரனானவன்,   சுரந்த   - மிகுதியாகி உண்டாகி, காதலில் -
பக்தியின்விருப்பினால்,   சொற்று  -   புகழ் வசனங்களைச் சொல்லி,
அழகாக   - இலக்ஷணமாக, நல் - நன்மைபொருந்திய, கரங்குவித்து -
ஹஸ்தமுகுளிதஞ்    செய்து, ஏத்தினான் - கீழ்வருமாறு ஸ்தோத்திரம்
பண்ணினான், எ-று.                                      (28)

வேறு.

998. கலையிலா வறிவனீ கலனிலா வழகுநீ
    மலைவிலா மதனுநீ மறுவிலா மதனுநீ
    யுலகினுள் வாயு நீ யுலகினுள் ளாயொரு
    நிலையிலா நிலையைநீ யாகிலு மிறைவனீ.

     (இ-ள்.) (அத்துதிகளாவன:-) கலையிலா  - நிரம்சமாகியிருக்கும்,
(அதாவது : கிரமகணவிதாயிகளும் ஸ்வபாவ காலதேச அம்சங்களோடு
கூடிக்    கிரமமாய்   விருத்தியடைவனவுமான,   மதி, ஸ்ரீுதி, அவதி,
மனபர்யய  ஞானங்களைப் போலல்லாமல்), அறிவன் - ஸகலத்தையும்,
ஏகசமயத்தில்   ஒருங்காக   அறியும் கேவல ஞானமென்னும் அனந்த
குண   மஹாத்மியமுடையவன்,   நீ - நீயே,    கலனிலா - ஆபரண
ரஹிதமாகிய,   அழகு   நீ   -   காந்தியும் நீயே, மலைவிலா - இனி
மாறுதலையடைந்து    விகார   மெய்தாத, மதனு நீ - மோக்ஷாநந்தப்
பெருமையுடையவனும்நீயே,   மறுவிலா  - குற்ற மில்லாத, மதனு நீ -
மோக்ஷமார்க்கமும் அல்லது சமயமும் நீயே, உலகினுள் - சான்