வனீ - திரிபுவனாதி பதிகளால் பிரிய தமமாக பூஜிக்கப்படுபவனும்
நீயே, மறுவிலா வொருவனீ - களங்கமில்லாத (அதாவது :
கலத்தற்றன்மையில்லாத) ஸ்வயம்பு வானவனும் நீயே, மாதவத்
தலைவனீ - மஹா தபஸையுடைய கணதராதி யதிவரர்களுக்கெல்லாம்
அக்ரணியானவனும் நீயே, சிறியயான் - அற்ப புத்தியையுடைய நான்,
நின் குணம் - உனது அனந்தமாகிய குணங்களை, செப்புதற்கு -
சொல்வதற்கு, அரியனீ - அருமையானவனும் நீயே, (என்பவைகளாம்),
எ-று. (31)
வேறு.
1001. இனையன துதிகள் சொல்லி யிருக்கையோ ரிரண்டு நான்கு
மனமலி வணக்கந் தோறு மூவகைச் சுழற்றி மாண்பின்
வினையற வெறிந்த கோனை விண்ணவ ரோடு மின்னுங்
கனைகழ லுரகர் கோமான் கைதொழு திறைஞ்சிப் போனான்.
(இ-ள்.) வினை - கர்மங்களை, அற - நீங்கும்படி, எறிந்த -
(வீதராக சுத்தோபயோகதியானத்தால்) நீக்கின, கோனை -
தலைவராகிய இச்சஞ்சயந்தபட்டார கரை, விண்ணவரோடு -
சதுர்ணிகாயாமரர்களோடு, மின்னும் - பிரகாசியாநின்ற, கனை -
சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, உரகர்கோமான் -
தரணேந்திரனானவன், இனையன - இத்தன்மையனவாகிய, துதிகள் -
ஸ்துதி வசனங்களை, சொல்லி - தொடுத்துச்சொல்லி,
இருக்கையோரிரண்டு - ஒப்பற்ற இரண்டுவித இருப்பில், (அதாவது :
காயோத் ஸர்க்கமாக நிற்பதிலும், பர்யங்காசனமாக இருப்பதிலும்,
(பொருந்தி), மனமலி - மனதில் நிறைந்த, (ஏகாக்கிரமாகிய), நான்கு
வணக்கந்தோறும் -(அரஹந்த, ஸித்த, ஸாஹு, தர்மமென்னும்) சதுர்வித
வணக்கத்துடன், மாண்பின் - (பக்தி பிரகிருஷ்ட முடிவில்) அழகாக,
கைதொழுது - ஹஸ்த முகுளிதஞ்செய்து, மூவகைச் சுழற்றி -
(கருப்போபபாத சம்மூர்ச்சனையால் சுழலும் ஸம்ஸாரம் நீங்கும்படி
அவ்வாறு முகுளித்தகையை) மூன்றுதரஞ் சுழற்றி, இருக்கையோரிரண்டு
- (மீண்டும்) ஒப்பற்ற இரண்டுவித இருக்கையில், (அதாவது :
சாஷ்டாங்கமாகவும், பஞ்சமுஷ்டியாகவு மிருப்பதில்), இறைஞ்சி -
வணங்கி, போனான் - தனதிடம் சென்றான், எ-று. (32)
"இருக்கையோரிரண்டு" என்னும் தொடர் உரையில்
இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.
1002. மாதக்க போதத் தாதித் தாபனும் விஞ்சை வேந்தன்
மேதக்க தருள வேரம் விடத்தக்க தென்று மிக்க
கோபத்தை யுபச மிப்பித் தருளினைக் கொண்டு நிற்கு
நோதக்க நீதி யுள்ளா னுவலுதற் குள்ளம் வைத்தான். |