474மேருமந்தர புராணம்  


 

    தாபத்தைத் தணிக்கு நீழல் போலுநல் லறத்தை மேவி
    யாபத்தை யகற்றி யின்ப மூர்த்திநீ யாக வென்றான்.

     (இ-ள்.)  (ஆதலால்  நீ   இதை   யனுசரியாமல்), கோபத்தீ -
குரோதாக்கினியானது,   குடைய   -   மிகுதியாகப்    பற்றியெரிந்து
உள்ளேகுடைய,    ஓடி - சென்று, நரகத்தை  - நரகத்தை, பல்கால் -
அநேகதரம்,     குறுகி   -    அடைந்து,  வேபத்தின் - கருமசலன
கொதிப்பினால்,   வெதும்பிநின்று  - சூடுற்றுநின்று, எவ்விலங்கினும் -
திரஸஸ்தாவரமாகிய எல்லா விலங்குகதிகளிலும், சுழன்று - சுழல்பட்டு,
வந்தாய்    -  வந்தனை, (இனி  அவ்வாறு செய்யாமல்), தாபத்தை -
ஆதபத்தை,  தணிக்கும்  - தணிப்பிக்கின்ற, நீழல்போலும் - குளிர்ந்த
நிழலுக்கொப்பாகிய,   நல்லறத்தை  - நன்மையாகிய ஸ்ரீஜினதர்மத்தை,
மேவி   -    பொருந்தி,    ஆபத்தை    -      பாவத்தினாலாகிய
ஆபத்துக்களையெல்லாம்,அகற்றி - நீக்கி, நீ - நீ, இன்பமூர்த்தியாக -
ஸ்வாத்மோத்தசுகத்தை    யுடையவனாகக்கடவாய், என்றான் - என்று
சொல்லினான், எ-று.                                     (35)

1005. அழலிடை மலையை யேந்தி வந்தவ னம்ம லைக்கீழ்
     நிழலிடைப் பெற்ற வின்ப நீர்ப்பிடும் பைக்க ணின்பஞ்
     சுழலவு முழுவை நிற்பத் தளிரினைக் கறித்து மெல்லு
     முழையுறு மின்பம் போலும் விலங்குறு மின்ப மென்றான்.

     (இ-ள்.) (இவ்வாறு   சொல்லிப்    பின்னரும்), இடும்பைக்கண்
இன்பம் - துக்கஸ்வரூபமாகிய ஸம்ஸாரத்தின் சுகமானது, அழலிடை -
அக்கினியினிடத்தில்,   மலையையேந்தி    - மலையைத்   தலையில்
தூக்கிக்கொண்டு,     வந்தவன் - வந்துசேர்ந்தவன், அம்மலைக்கீழ் -
அந்தமலையின்   கீழுண்டாகிய, நிழலிடை - நிழலினிடத்தே, பெற்ற -
அடைந்த,    இன்பம்   -  சௌக்கியத்தின், நீர்ப்பு - தன்மையாகும்,
சுழலவும்    - தன்னைச்சுற்றி   எப்பக்கத்திலும், (சூழ்ந்து), உழுவை -
புலிகள்,    நிற்ப  - கொல்லுதற்கு நிற்ப, தளிரினை - இலைத்துளிரை,
கறித்து  - கடித்து, மெல்லும் - மெல்லுகின்ற, உழையுறும் - மானானது
அடைகின்ற,  இன்பம்போலும்  - சுகத்தைப்  போலும், விலங்குறும் -
விலங்குகதி    ஜீவன்கள்    அடைகின்ற,   இன்பம்   -  நிலையற்ற
சௌக்கியமானது,  என்றான்   -   என்றும்  சொன்னான், எ-று. (36)

1006. அருளிலார்க் கில்லை யின்ப மார்க்கலி யுலகத் தின்கட்
     பொருளிலார்க் கின்ப மில்லா வாறுபோற் பொன்கொள் வாரிற்
     றெரிவிலார்க் கில்லை யென்றுந் தீநெறிச் செல்ல னீங்கன்
     மருளிலா மனத்தை யாய்நீ மனையற மருவு கென்றான்.

     (இ-ள்.)    (பின்னரும்),     ஆர்கலி       யுலகத்தின்கண் -
ஸமுத்திரஞ்சூழ்ந்த       இப்பூவுலகத்தில்,       பொருளிலார்க்கு -
திரவியமில்லாதவர்களுக்கு, இன்பமில்லாவாறு