பன்னிரண்டாவது :
ஸ்ரீ விஹாரச்சருக்கம்
1011. காதியைக் கடிந்து வேந்தன் கைவலச் செல்வ னானான்
வேதிய னமைச்சன் விஞ்சை வேந்தனாய் வியந்து போனான்
போதணி குழலி னாளும் புதல்வனுந் தேவ ரானார்
யாதினி யிவர்கள் செய்கை யென்றிடி லியம்ப லுற்றேன்.
(இ-ள்.) வேந்தன்
- ஸிம்மஸேன மஹாராஜன், (கடைசியாக
சஞ்சயந்தனாகி), காதியைக்கடிந்து - தபஞ் செய்து காதி கர்மங்களைக்
கெடுத்து (பாவமோக்ஷமாகிய அரஹந்த பதவியை யடைந்து உடனே
அகாதிகருமங்களையும் கெடுத்து), கைவலச் செல்வனானான் - திரவிய
மோக்ஷமடைந்தான், வேதியன் - பிராம்மணனாகிய, அமைச்சன்
-
ஸ்ரீபூதியென்கிற மந்திரியானவன், விஞ்சைவேந்தனாய் - வித்தியாதர
வரசனாகிய வித்துத்தந்தனாகி, வியந்து - ஆச்சரியத்தையடைந்து,
போனான் - போய்விட்டான், போதணி
குழலினாளும் -
புஷ்பமாலைகளையணிந்த அளகத்தையுடைய இராமதத்தா தேவியும்
புதல்வனும் - அவளுடைய இளைய புத்திரனாகிய பூர்ணச் சந்திரனும்,
தேவரானார் - தேவர்களானார்கள் (அதாவது : இராமதத்தை லாந்தவ
கல்பத்தில் ஆதித்யாபனென்னும் தேவனாகவும் பூர்ண
சந்திரன்
பவணலோகத்தில் தரணேந்திரனென்னும் தேவனாகவும் ஆனார்கள்),
இனி - இனிமேல், இவர்கள் செய்கை - இந்த இரு தேவர்களுடைய
செய்கையானது, யாது என்றிடில் - என்னவென்றால், இயம்பலுற்றேன் -
அதைச் சொல்லத் தொடங்குகிறேன், எ-று. (1)
1012. வேதிகை வேதண் டத்தின் வில்லுநாண் வீக்கிற் றேபோ
லோதநீ ருடுத்த மண்மே லுத்தர மதுரை யென்னும்
போதொடு தளிர்கண் மிண்டிப் பொறிவண்டுந்
தேனும் பாடத்
தாதொடு மதுக்கள் வீயுந் தண்பணைச் சோலைத் துண்டே.
(இ-ள்.)
மண்மேல் - இப்பூமியில், வேதிகை - மஹாலவண
சமுத்திரத்தின் வஜ்ரவேதிகையாலும், வேதண்டத்தின் - விஜயார்த்த
பர்வதத்தினாலும், வில்லு - வில்லில், நாண்
வீக்கிற்றேபோல் -
நாணேறிட்டுக் கட்டினதுபோலும் (ஆக்கிருதியையுடைய), ஓதநீருடுத்த
- சமுத்திரஜலஞ் சூழ்ந்த, மண்மேல் -
பூமியாகிய இந்தப் பரத
க்ஷேத்திரத்தில், போதொடு - புஷ்பங்களோடு, தளிர்கள்
-
துளிர்களும், மிண்டி -
நெருங்கி மிகுதியாகி, பொறி.
புள்ளிகளையுடைய, வண் |