48மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

களும், உணர்வு - ஸம்மியக்ஞான உத்க்ருஷ்டமும், உதிர்ப்பையாக்கும்
- நிர்ஜரையை  உண்டாக்கும்,  (அது)  முன்பு - ஆதியில், சென்று -
வந்து,   உயிர்க்கண்   -  ஆத்மனிடத்தில்,   நின்ற  - நிலைபெற்ற,
வினையின்கண்    -    ஞானாவரணாதி  அஷ்டகர்மங்களினிடத்தே
உள்ளதான,  மூழ்த்தமாதி  -  ஒரு  முகூர்த்தம்  முதலாக,  நின்ற -
பொருந்தி யிராநின்ற,அத்திதியினோடு - அந்தந்த கருமஸ்திதிகளோடு,
பயன்   செய்யும்   -  பலனைத்தரும்,  ஆற்றல்  -   ஸத்துவத்தை,
ஒன்றியவகையினாலே      -     ஞானதியானத்தில்    பொருந்திய
விதாயத்தினாலே, கணந்தொறும் - ஸமயந்தோறும், உய்க்கும் - நீக்கி
வெளிப்படுத்தும், எ-று.

      நிர்ஜரையின்  விவரத்தை  விரிவாக பதார்த்தஸாரத்தில் முதல்
நவபதார்த்தாதிகாரத்தில் கண்டுகொள்க. (100)

 101. அனந்தமா மணுக்கள் கூடி யங்குலி யயங்கம் பாகிற்
     குணங்களாற் செறியக் கட்டிக் குணங்களோ டாற்றன் மூன்றிற்
     றணந்திடா தயங்க லோக பதேசமாஞ் சமய கால
     மனந்தமா லோக மெல்லாம் வர்க்கணா ரூபத் தாலே.

    (இ-ள்.)  அனந்தமாம்   -   அநேகமாகிய,  அணுக்கள்கூடி  -
பரமாணுக்கள் சேர்ந்து,  (திரவ்விய  ஸம்பத்தென்று  சொல்லப்பட்டு),
அங்குலி   அய்ங்கம்பாகில்   -   அங்குலி  அஸங்கியாத  ஏகபாக
க்ஷேத்திரத்தில்,    (க்ஷேத்திர     ஸம்பத்தென்று   சொல்லப்பட்டு),
குணங்களால் -    (ஸ்நிக்த,    ரூக்ஷ)   குணங்களால்,    செறிய -
நெருங்கும்படி,  கட்டி - பந்திக்கப்பட்டு, குணங்களோடு - (வர்ணாதி)
குணங்களோடு,    ஆற்றல்    மூன்றில்,    (ஸ்வபாவ,    உபலப்தி,
ஸம்ஸ்காரமென்னும்)  திரிசக்திகளினின்றும், தணந்திடாது - நீங்காமல்,
(பாவ  ஸம்பத்தென்று   சொல்லப்பட்டு),  அயங்கலோகபதேசமாம் -
(நீங்காமல்   நிற்கும்   கால   அளவின்  உத்கிருஷ்டஸ்திதியினால்)
அஸங்கியாத    லோகப்பிரதேச    காலமும்,    சமய   காலம் -
(ஜகன்னியஸ்திதியினால்) ஒரு சமயமும் உடையவாய் (கால  சம்பத்து
என்று  சொல்லப்பட்டு),  லோகமெல் லாம்  -  லோக முழுமையும்,
வர்க்கணாரூபத்தால் -  கார்மணவர்க்கணை யென்று  சொல்லப்பட்ட
இவ்விதமான  கர்மரூபத்தாலே  (அதாவது கர்மப்பிரகிருதிகளினாலே),
அனந்தமாம் - அனந்தங்களாகும், எ-று                    (101)

 

 102. யோகமே பாவந் தானு முடனின்ற வுயிரின் யோகின்
     வேகந்தான் மூல மாகி விகற்பமாய் விரிந்த கந்தம்
     யோகத்தா லுயிர்ப்ப தேசத் தொழிவின்றி யொப்பச் சென்றாற்
     பாகமுந்தி திதியு மோக பாவத்தாற் பந்த மாமே.

     (இ-ள்.) யோகமேபாவந்தானும் -  மநவசனகாயபாவபரிணாமம்,
உடனின்ற - சேர்ந்திராநின்ற, உயிரின் -  ஆத்மனுடைய, யோகின் -
அந்தமான வசனகாயத்தி