அம்புபோல, இடை -
மத்தியிலே, கறுத்து - கறுப்பாகி, சூழ -
சுற்றிலும், வெளுத்து -
வெளுப்பாகி, மடங்கல்போல் -
ஸிம்மம்போன்ற, மொய்ம்பின் - பராக்கிரமத்தையுடைய, மைந்தர்
-
விட புருஷர்களுைடைய, மனத்தினை - மனதை, கணத்து - ஒருக்ஷண
நேரத்திலே, அழிக்கும் -
கெடுக்கும்படியான, நல்லார் -
ஸ்த்ரீமார்களுடைய, தடம் - விசாலம் பொருந்திய, கண் - கண்கள்,
அம்பாக - அம்பாக, தனுவில் - (அவர்களுடைய
புருவமாகிய)
வில்லினிடத்தே, நாண் - நாரியை, ஏற்றி - ஏறிட்டு, அனங்கன்தான் -
மன்மதனானவன், அங்கு - அவ்விடத்திலே,
அடங்கி நின்று -
அடக்கமாக நின்று, மைந்தர் - இந்தக் குமாரிருவர்களுடையவும்,
உள்ளத்தை - மனதை, அழிக்கல் - கெடுத்துத் தன் வசமாக்குகைக்கு,
உற்றான் - பொருந்தி நின்றான், எ-று. (11)
1022. கைச்சிலை குழைய வாங்கிக் கணைமழை பொழிந்து காமத்
திச்சையை மைந்த ருள்ளத் தெழுத்தமாட் டாத
னங்கன்
வச்சிரம் பஞ்சிற் றுய்யா லடுப்படு மேனுங்
காமத்
திச்சையை மைந்த ருள்ளத் தெழுத்தொணா தென்று போனான்.
(இ-ள்.) (அவ்வாறு
செய்யத் தொடங்கிய), அனங்கன் -
மன்மதனானவன், கை - கையில், சிலை -
வில்லை, குழைய -
வளையும்படி, வாங்கி - வளைத்து, கணைமழை - பஞ்சபாணமாகிற
அம்பு வருஷங்களை, பொழிந்து - சொரிந்து,
காமத்து -
காமராகத்தின், இச்சையை - ஆசையை,
மைந்தருள்ளத்து -
இக்குமாரர்களின் மனதில், எழுத்தமாட்டாது - உண்டாக்க முடியாமல்,
வச்சிரம் - வஜ்ராயுதமானது, பஞ்சில் - பஞ்சிலே, துய்யா - சேர்ந்து,
வடுப்படுமேனும் - அப்பஞ்சு வெட்டுண்டு
குற்றமடைந்தாலும்,
காமத்திச்சையை - காமராகத்தை, மைந்தருள்ளத்து
- இந்தக்
குமாரர்களின் மனதில், எழுத்தொணாதென்று -
உண்டாக்க
முடியாதென்று, போனான் - நீங்கிப் போனான், எ-று.
இவ்வாறு கூறியதனால்,
அக்குமாரர்கள், சம்சார சரீர
போகங்களில் விராக மடைந்தார்களென்பது பெறப்படும்.
பஞ்சில்
வச்சிராயுதம் புகுதாது; அத்தகைய அது
பஞ்சிற் புகுந்து
வடுப்படுத்தினும், இக்குமாரர் மனதில் காம இச்சையை
எழுத்த
முடியாதென்றதனால் அவர்களின் மனோதிடம் நன்கு விளங்கும். (12)
1023. காயத்தி னுவர்ப்புங் காம போகத்தின் வெறுப்பும் மாற்றாம்
மாயத்தின் வடிவு மெல்லாம் நினைப்பிலா
மனத்தி னார்கள்
நோயொத்த நுகர்ச்சி செல்வ நுரையொத்த
விளமை தேசு
காயத்து வில்லை யொத்த காமனுக் கிடமங்
குண்டோ.
(இ-ள்.) காயத்தின்
- சரீரத்தினது, உவர்ப்பும்
-
அசுசித்தன்மையையும், காமபோகத்தின் - காம சுகத்தின், வெறுப்பும் -
விராகமும், மாற்றாம் - ஸம்ஸார |