விமலனெனு மறிவன்மலர்
மழைபொழிய விண்ணோர்
கமலமிசை யுலவியொரு காவக மடைந்தான்.
(இ-ள்.)
அமலம் - நிர்மலகரமான, நல - நன்மையாகிய,
ஆடியகத்து - கண்ணாடியினிடத்தில், ஆன -
உண்டாகிய,
நிழல்போல - சாயைபோல, துமிலமிடை -
சப்த காரணமாகிய
பரமாணுக்களால் செறிந்த, மூவுலகும் -
இம்மூன்று லோகமும்,
தோன்றும் - தோற்றுகின்ற, அறிவுடைய - கேவலஜ்ஞானத்தையுடைய,
விமலனெனும் - விமல தீர்த்தங்கரனென்னும் பெயருடைய, அறிவன் -
அரஹந்த பரமதேவன், விண்ணோர் - தேவர்கள், மலர்மழை - புஷ்ப
வருஷங்களை, பொழிய - சொரிய, கமலமிசை
- தேவர்களால்
நிருமித்த செந்தாமரைப் புஷ்பத்தின்மேல் (வ்யோமகமனத்துவமாக),
உலவி - ஸ்ரீ விஹாரமாகி, ஒரு - ஒப்பற்ற, காவகம்
- உத்தர
மதுரையிலுள்ள ஒரு உத்யானத்தை, அடைந்தான் -
சேர்ந்தான்,
எ-று. (15)
1026. அனகன்வினை யகலவெழுந் தருளுமெனு மளவிற்
கனகநவ மணிமயமோர் கமலநறு மலரோ
சனையகல முடையவத னிதழ்கடொறு மடவார்
மனமகிழ நடநவில வானவ ரமைத்தார்.
(இ-ள்.) அனகன்
- பாபரஹிதனாகிய விமல தீர்த்தங்கரன்,
வினை - பவ்விய ஜீவன்களுடைய பாப வினைகள்,
அகல -
நீங்கும்படி, எழுந்தருளும் - ஸ்ரீ விஹாரம் வரும், எனும் - என்கின்ற,
அளவில் - காலத்தில், வானவர் -
தேவர்கள், கனகமயம் -
ஸ்வர்ணமயமும், நவ - ஒன்பது விதமாகிய, மணிமயம் - இரத்தின
மயமுமாகிய, ஓர் - ஒப்பற்ற, நறும் - வாசனையையுடைய, ஓசனை
யகலமுடைய - ஒரு யோஜனை
யகலமுள்ள, கமலமலர் -
செந்தாமரைப் புஷ்பத்தை, அதன் - அக்கமலத்தின், இதழ்கடொறும்
- இதழ்களிதழ்கடோறும், மடவார் - தேவ
அரம்பையர்களால்,
மனமகிழ - பார்க்கப்பட்டவர்கள் மனம் ஸந்தோஷத்தை யடையும்படி,
நடம் - நர்த்தனங்களை, நவில - செய்யும்படியாக, அமைத்தார்
-
நிருமிதஞ் செய்தார்கள், எ-று.
‘மயம்" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.
(16)
1027. வாசமலர் நான்கினவன் மேவியிறை வானோ
ரோசனை யிரண்டகன்ற மண்டபமொன் றமைத்தா
ரீசனெழுந் தருளுமென வெழின்மணிப்பொன் முத்தி
னோசனைகண் மூன்றகன்ற வீதியுட னமைத்தார்.
(இ-ள்.) (அவ்வாறியற்றிமேலும்),
ஈசன் - திரிலோகநாதனாகிய,
அவன் - அந்த விமலதீர்த்தங்கரனாகிய ஜினேந்திரன்,
வாசம் -
வாசனைபொருந்திய, மலர் - |