வைசயந்தன் முத்திச்சருக்கம் 49


Meru Mandirapuranam
 

னுடைய, வேகந்தான்  -  தீவ்ரமானது,   மூலமாகி   -  காரணமாகி,
விகற்பமாய்  -  நானாவிகற்பங்களாய், விரிந்த  - விசாலித்திராநின்ற,
கந்தம் - முன்கவியில்  சொன்ன ப்ரகிருதிபந்தமானது, யோகத்தால் -
மன   வசனகாயத்தால்,   உயிர்ப்பதேசத்து   -  ஆத்மப்ரதேசத்தில்,
ஒழிவின்றி  -  இடைவிடாமல்,  ஒப்பச்சென்றால்  -  (பாலும்  நீரும்
கலந்ததுபோல்)   ஒரு   தன்மையாக   பந்திக்கப்பட்டால்,    (அது
ப்ரதேசபந்தமென்று       சொல்லப்பட்டு),      மோகபாவத்தால் -
மோகநீயபரிணாமத்தால்,    பாகபந்தமும்   -    அனுபாகபந்தமும்,
திதிபந்தமும் - ஸ்திதிபந்தமும், ஆம் - ஆகும், எ-று.

     ஈற்றிலுள்ள     பந்தமென்பது    தீபகமாக   இரண்டிடத்துங்
கூட்டப்பட்டது.                                        (102)

 103. ஏழுமூன் றிரண்டு பத்தா லெறிந்தன கோடா கோடி
     யாழிக ளாகு மான்ற நிலையல்ல தந்த மூழ்த்தம்
     மோழைமோ வத்தி னுக்கு முதல்மும்மை யீற்றி னுக்கு
     மாழிய நாம கோதத் தாயுமுப் பத்து மூன்றே.

    (இ-ள்.)  மோழை - மடமையாகிய,  மோவத்தினுக்கும் - மோஹ
நீய கர்மத்திற்கும், முதல் - முதலிலுள்ள, மும்மை -  ஞானாவரணீயம்
தரிசனாவரணீயம்  வேதநீயம்  ஆகிய  மூன்றிற்கும்,  ஈற்றினுக்கும் -
அந்தியத்திலுள்ள  அந்தராயகர்மத்திற்கும்,  ஆழிய  -   பெரிதாகிய,
நாமம் -  நாமகருமத்திற்கும்,  கோதத்து -  கோத்திர  கர்மத்திற்கும்,
ஆன்றநிலை -  உத்கிருஷ்ட  ஸ்திதிபந்த  நிலையானது,  (முறையே)
ஏழுமூன்று இரண்டு -  ஏழையும் மூன்றையும் இரண்டையும், பத்தால்
எறிந்தன - பத்தால் பெருக்கியனவாகிய, கோடாகோடி ஆழிகளாகும்
- கோடாகோடி கடல்களின் காலமாகும் [அதாவது 70 கோடாகோடி
கடல்களும் முப்பது கோடாகோடி கடல்களும் இருபது கோடாகோடி
கடல்களும்  ஆகும்.  எப்படியெனில்  மோஹநீய  கருமத்திற்கு 70
கோடாகோடி  கடற்காலமும்,  ஞானாவரணீயம்,  தரிசனாவரணீயம்,
வேதநீயமென்னும்  மூன்று  கருமத்திற்கும்  ஈற்றிலுள்ள  அந்தராய
கருமத்திற்கும் 30 - கோடாகோடி கடற்காலமும், நாம கருமத்திற்கும்
கோத்திரகருமத்திற்கும் 20கோடாகோடி கடற்காலமும் ஆகும்], ஆயு
-  ஆயுஷ்ய   கருமத்திற்கு,   முப்பத்துமூன்று   -   (உத்கிருஷ்ட
ஸ்திதியானது)   முப்பத்துமூன்று   கடற்காலமேயாகும்,  அல்லது  -
இவையல்லாததாகிய ஜகன்னிய ஸ்திதிபந்தமானது, அந்த மூழ்த்தம் -
ஓர்   அந்தர்   முகூர்த்தகாலமாகும்,  (மத்திம  ஸ்திதியானது  பலப்
பிரகாரமாகும்),  எ-று.  இச்செய்யுள் நிரனிரைப்பொருள்கோளணியாக
வமைந்தது.                                           (103)

 

  104. நஞ்சென வுறைக்கும் பாவம் நல்வினை நாவி லிட்ட
      வஞ்சுவை யமிர்தம் போல வின்பத்தை யாக்கு மாற்ற