ஸ்ரீ விஹாரச்சருக்கம் 493


 

 1044. ஏழடி யெழுந்து வந்தாங் கிறைவனை யிறைஞ்சி யேத்திப்
      பாழியந் தடக்கை வேந்தர் பலகல மவர்க்கு நல்கி
      யேழுய ருலகந் தன்னு ளிருள்கெட வெழுந்த கோவின்
      சூழொளி யனைய பாதந் தொழுதுநா மெழுக வென்றார்.

     (இ-ள்.)  ஏழடி - ஏழடி  தூரம்,  எழுந்து வந்து - எழுந்திருந்து
வந்து,   ஆங்கு அவ்விடத்தில், இறைவனை - சுவாமியை, இறைஞ்சி -
வணங்கி,  ஏத்தி - ஸ்தோத்திரம்  பண்ணி, பாழி - பலம் பொருந்திய,
அம்   -   அழகிய,    தடக்கை   -   விசாலம் பொருந்தி தியாகம்
கொடுக்கும்படியான  கையையுடைய, வேந்தர் - இராஜகுமாரர்கள், பல
கலம்  -  பலவாகிய   ஆபரணங்களை,   அவர்க்கு   -  அச்செய்தி
சொல்லியவர்களுக்கு,   நல்கி  -  கொடுத்து,  ஏழுயருலகந்தன்னுள் -
உயர்ந்த இந்த ஏழு லோகத்துள்ள பவ்வியப் பிராணிகளுக்கு, இருள் -
மித்தியாத்து  வாந்தகாரம்,   கெட   -   நீங்கும்படி,   எழுந்த - ஸ்ரீ
விஹாரமாகி வந்த,   கோவின் - ஸ்வாமியினுடைய, சூழொளியனைய -
நிறைந்த சூர்யன்   ஒளிபோலப்  பிரகாசத்தைப் பொருந்திய, பாதம் -
பாதங்களை, நாம் - நாம், தொழுதும் - போய் வணங்குவோம்,  எழுக
- அதற்காகச்   செல்க,   என்றார்   -   என்று    பரிவாரங்களுக்கு
ஆக்ஞாபித்தார்கள், எ-று.                                 (36)

 1045. முரன்றன சங்க மெங்கும் முழங்கின முரச நின்று
      துரங்கம் மேறி யானை மேன்மன்னர் தொடைய லேந்தி
      நிரந்தனர் நெளிந்த தன்று நிலமகண் முதுகு நீடுங்
      கரந்தன கடிய வாய கருவினைக் குழாங்க ளாங்கே.

     (இ-ள்.)  சங்கம்  - சங்கவாத்தியங்களை, முரன்றன - பலமாகச்
சப்தித்தன, எங்கும் - எவ்விடங்களிலும், முரசம் - பேரிகைகளானவை,
நின்று  - வியாபித்து நின்று, முழங்கின - சப்தித்தன, மன்னர் - இந்த
இராஜகுமாரர்கள், தொடையல் - புஷ்பமாலை முதலியவைகளை, ஏந்தி
- தரித்துக்கொண்டு,    யானைமேல் - யானையின்மேலும், துரகமம் -
(பரிவாராதியர்கள்) குதிரைகள் முதலானவைகளின் மேலும், ஏறி - ஏறி,
நிரந்தனர் - (அங்கே வந்து) நெருங்கினார்கள், அன்று - அப்பொழுது,
நிலமகள் முதுகு  -  பூமிதேவியின் முதுகு, நெளிந்தது - நெளிவுற்றது,
நீடும்  - ஆத்மனிடத்தில்  வெகு  காலமா   யிராநின்ற, கடியவாய -
பொல்லாங்காகிய,  கருவினைக் குழாங்கள் - பாபஸமூகங்களெல்லாம்,
ஆங்கு - அப்பொழுது, கரந்தன - மறைந்தன  (அதாவது : நீங்கின),
எ-று.                                                  (35)

 1046. சந்தனக் குழம்பி னார்ந்த சந்திர காந்தச் செப்புங்
      குங்குமக் குழம்பு விம்மு மிரவியின் குழவிச் செப்பு