சமவசரணச்சருக்கம்495


Meru Mandirapuranam
 

பதின்மூன்றாவது

சமவசரணச்சருக்கம்.

 1048. யோசனை பன்னி ரண்டி னும்பர்கோன் றம்பங் காணாப்
      பேசொணா வகையி னின்ற பெருமித மழிந்த தியார்க்கு
      மீசனை யிறைஞ்சி னார்க ளெய்தினா ரிறைவன் கோயில்
      வீசுவெண் சாம ராதி பரிச்சந்த முழுதும் விட்டார்.

   (இ-ள்.)   யோசனை  பன்னிரண்டின் - பன்னிரண்டு யோஜனை
விஸ்தீர்ணமுள்ள சமவசரண பூமியின் பிராரம்பமாகிய பிரதம பூமியில்,
உம்பர்கோன்    தம்பம்  -     தேவர்களுக்கெல்லாம்   நாதனாகிய
ஜினேந்திரனுடைய    (கோயிலாகிய    சமவசரணத்தின்    உள்ளே
செல்லும்படியான     நாலு       மஹாதிக்குகளிலுள்ள    வீதியின்
மத்தியிலிராநின்ற)  மானஸ்தம்பத்தை,  காணா - கண்டு, யார்க்கும் -
எவர்க்கும்,  பேசொணா  வகையில்  -  சொல்லி  முடியாத விதமாக,
நின்ற  -  இராநின்ற,  பெரு  -  பெரிதாகிய, மிதம் - மித்தியாத்துவ
கர்மமானது,  அழிந்தது  - நிலை  குலைந்தது,  வீசும்  -  வீசுகின்ற,
வெண் -  வெளுப்பாகிய,  சாமராதி - சாமரை முதலிய, பரிச்சந்தம் -
ராஜ பரிச் சின்ன பரிவாரங்களை, முழுதும் - முழுமையும், விட்டார் -
(இந்த     மேருமந்தரரென்னுமிரண்டு      ராஜ     குமாரர்களும்)
விடப்பட்டவர்களாகி,  இறைவன்  -  ஸ்வாமியினுடைய,   கோயில் -
ஆலயத்தை, எய்தினார் - அடைந்தார்கள், (அவ்வாறடைந்து), ஈசனை
- திரிலோகாதிபதியாகிய       பகவானை,       இறைஞ்சினார்கள்
வணங்கினார்கள், (எ-று). (1)

 1049. யானையி னிழிந்து மானாங் கணத்திரு காத வீதி
      மானபீ டத்தை மார்பி னளவுள மதிலை யெய்திக்
      கானுறை கமலப் போதிற் கைதொழு திறைஞ்சி வாழ்த்தி
      யூனந்தீர் தூயத் தானாங் கணம்புக்கார் கோசம் போயே.

    (இ-ள்.)    யானையின்  -     ஆணையினின்றும்,   இழிந்து -
(மேருமந்தரராகிய    விருவர்களும்)       இறங்கி,     அளவுள -
யோக்கியோத்ஸேதத்தினை யுடைய,  மதிலை -  தூளி சாலமென்னும்
மதிலையும்,  மானாங்கணத்து  -  அதன் அப்பியந்தர பாகத்திலுள்ள
ப்ராஸாத சைத்ய பூமியையும்,  இருகாதவீதி - அப்பூமியில் சதுர்மஹா
திக்குகளிலு    மிராநின்ற    இரண்டுகாத   மகலமான   வீதிகளின்
பிரதமத்தில், மார்பின்  மானம் - மார்பளவு உன்னதமுடைய, பீடத்தை
- பிரதமபலிபீடத்தை,   எய்தி -  அடைந்து,  கானுறை -   வாசனை
பொருந்திய, கமலப்போதில் - தாமரைப் புஷ்பத்திற்குச்