சமவசரணச்சருக்கம்497


Meru Mandirapuranam
 

பட்டைகளாகிய அத்தம்பத்தின், நாற்றிசையும் - அடியிலும் மேலேயும்
நாலுதிக்குகளிலும்,  துயரினை  - துன்பத்தை, கெடுக்கும் - போக்கும்,
சித்தப்படிமை -  ஸித்த   பரமேஷ்டிகளின்   பிரதி  பிம்பங்களாகிய
பிரதிமைகள், ஆம் - நிர்மிக்கப்பட்டனவாகும், எ-று. (4)

 1052. நான்முகப் பூதத் துச்சி பாலிகைக் கமலப் போதின்
     மேல்வைத்த செம்பொற் கும்பத் துச்சிமேற் பலகை தன்னிற்
     பானிறப் பகடு பாலைப் பதுமைமேற் பொழியத் தேவி
     மேன்முடிப் பதும ராக மிருபதோ சனைவி ளக்கும்.

   (இ-ள்.)    நான்முகப் பூதத்து - அந்த மானஸ்தம்பத்தின்மேலே
நிருமிக்கப்பட்ட    சதுர்முகத்தையுடைய     பூதத்தின்,     உச்சி -
தலையின்மேல்    உள்ள,    பாலிகை  -   பாலிகையில்,   கமலப்
போதின்மேல்   வைத்த   -    தாமரைப்புஷ்பத்தைத்    தலையில்
வைத்திராநின்ற,    செம்பொற்     கும்பத்துச்சிமேல்   -    சிவந்த
பொன்னாலாகிய    பூர்ண   கும்பத்தின்மேலே,   பலகைதன்னில் -
பலகையாகச்செய்து   அதில்,   பதுமை   -  லக்ஷுமிதேவி  உருவம்
நிருமித்து, மேல் -  அந்த  லக்ஷ்மிதேவிமேல், பால்நிறம் - வெள்ளை
நிறத்தையுடைய,   பகடு -  யானைகளானவை, பாலை -  க்ஷீரத்தை,
பொழிய -   சொரியும்படி   செய்திருக்க,   அத்தேவி  -    அந்த
லக்ஷ்மிதேவியின், முடிமேல் - கிரீடத்தின்மேலிராநின்ற, பதுமராகம் -
பத்மராகரத்தினமானது,  இருபதோசனை  -  இருபதுயோசனை தூரம்,
விளக்கும் - பிரகாசிப்பதாகும், எ-று. (5)

 1053. மணிமய மாய சுக்கம் நான்றுமங் கலங்க ளேந்தி
      யணிபெற நின்ற நான்கா மந்தமா னத்தம் பத்தை
      யிணையிலார் வலங்கொண் டேத்தி யிறைஞ்சிப்போய்க்
                                                கோச நீல
     மணிநிலத் தகழி மார்பி னளவுள மதிலைக் கண்டார்.

   (இ-ள்.)   மணிமயமாய  - இரத்தினமயமாகிய, சிக்கம் - உறிகள்,
மங்கலங்கள்  -  அஷ்டமங்கலங்களை,   ஏந்தி  - தரித்து, நான்று -
அந்த லக்ஷிமியிருக்கப்பட்ட  பலகையினின்றும் தொங்கப்பட்டனவாகி,
அணிபெற - அழகு பெறும்படி,  நின்ற - (ப்ராஸாதசைத்ய பூமியாகிய
முதல் பூமியில் சதுர் மஹாதிக்கு  வீதிகளில்) இராநின்ற, நான்காம் -
நாலாகிய,  அந்தமானத்  தம்பத்தை  -  அந்தமான  ஸ்தம்பங்களை,
இணையிலார்   -   உபமையில்லாத   அழகையுடைத்தாகிய   இந்த
மேருமந்தரரிருவர்களும்,   வலங்கொண்டு  -  பிரதக்ஷணமாக வந்து,
ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி, இறைஞ்சி -  வணங்கி, கோசம்போய்
- அந்த ப்ராஸாத சைத்ய  பூமியின்  மற்ற  பாதியாகிய ஒரு குரோச
தூரமும்போகி,     (அவ்விடத்திலிராநின்ற),       மார்பினளவுள -
மார்பளவுயரமுள்ள,   மதிலை  -  மதிலையும், (அதன்  அப்பியந்தர
பாகத்திலுள்ள), நீலமணி  நிலத்து - இந்திர  நீலரத்தினத்தினாலாகிய
நிலத்தையுடைய, அகழி -