சமவசரணச்சருக்கம்501


Meru Mandirapuranam
 

    (இ-ள்.)       உதய     கோபுரமது  -    உதயதரமென்னும்
அக்கோபுரமானது,    காதமூன்று   -   மூன்று  காதம், உயர்ந்து -
உன்னதமாகி, இரண்டுகாத  நீண்டு -  இருகாதம்    நீளமுடையதாகி,
வாய்தல் -   வாசற்படியானது,  காதமாய்  அகன்று  -  ஒரு  காதம்
அகலமாகி, சிறப்பு - அக்ஷ்டமங்கலங்களையுடைய, மும்மைப்படிமை -
மூன்று    ஜினப்பிரதிமைகள்,   (நிலைக்கொன்றாக     விராநின்ற),
முன்னிலையதாகி - மூன்று  மேல் நிலைகளையுடையதாகி, வாய்தல் -
அக்கோபுரத்தின்  வாசற்படியின்  இரு  பக்கங்களிலும், சோதியுள் -
(உண்டாகிய) ஜோதிமயத்தினால்,   குளித்து -  தங்கள் ஜோதியானது
மறையப்பட்டு, சோதிடத் தேவர் -  ஜோதிஷ்கத் தேவர்கள், காப்ப -
துவார பாலகர்களாகிக்   காவல்  செய்ய,  போதரும்  -  லட்சணம்
நிறைந்திரா நின்ற,    பதாகை -   துவஜக்  கொடிகள்,  சூழ்ந்தது -
சூழ்ந்திராநின்றதாக, ஆம் - ஆகும், எ-று. (13)

 1061. வில்லைஞ்ஞூ றகன்று யர்ந்து வெள்ளியா லியன்று சென்னிச்
     சொல்லிய வகையி னாலே சுருங்கிப்பொற் சூட்ட தாகி
     வல்லிமுந் நிலையட் டாலைக் கொடியுடை மதிலி னின்ற
     சொல்லிய கோபு ரத்தைத் தொழுதுபூச் சிதறிப் புக்கார்.

   (இ-ள்.)    வில்லைஞ்ஞூறு   -  ஐந்நூறுவில்லு,     அகன்று -
அடியிலே   அகலத்தையுடையதாகி,    உயர்ந்து  -     1பின்னால்
சொல்லப்பெற்ற    உன்னதத்தை   யுடையதாகி,     வெள்ளியால் -
வெள்ளியினால்,            இயன்று    -      செய்யப்பட்டதாகி,
சொல்லியவகையினாலே -  2பின்  சொல்லப்பட்ட    விதத்தினாலே,
சுருங்கி - அடியகலத்தினின்றும்  மேலே  சுருங்கப்பட்டதாகி,  பொற்
சூட்டதாகி - பொன்னாலியன்ற தலைக்கட்டையை யுடையதாகி, வல்லி
- அளவின் பிரகாரமாகிய, அட்டாலை -  மேற்றிண்ணையை யுடைய,
முந்நிலை - மூன்று நிலைகளை யுடையதாகி,  கொடியுடை - துவஜக்
கொடிகளையும் உடைய, மதிலின் -   உதயதரமென்னும்   மதிலிலே,
நின்ற - சேர்ந்து    வீதிகளின்  நேரில்   நின்ற, சொல்லிய  - முன்
பாடலில் சொல்லப்பட்ட,   கோபுரத்தை  -  உதயதர  கோபுரத்தை,
தொழுது -  வணங்கி,  பூச்சிதறி  -  புஷ்பங்களைத்தூவி,  புக்கார் -
அதனுள் ஆகிய வன பூமியை அடைந்தார்கள், எ-று. (14)

1.இச்சருக்கத்தில் 80-வது பாடலில் சொல்லப்பட்ட உன்னதமாகியது.
2.இச்சருக்கத்தில்  34-வது  பாடலில் சொன்னவகைபோல் சுருங்கப்
பெற்றது.

 1062. பலநிறம் பயின்ற பூமி பரமன தறிவு போல
      வுலகெலா மடங்கு மேனு முள்ளிரு காத மாகி
      நிலவிய மதிலின் மூலை நின்றகுட் டியங்க ணான்கிற்
      பலவன மாகிப் பைம்பொன் மதிலினைச் சூழ்ந்த துண்டே.