(இ-ள்.) பலநிறம் - பலவர்ணங்களினால், பயின்ற - செய்திராநின்ற,
பூமி - அந்த வன பூமியானது, பரமனது -
ஸ்வாமியினுடைய,
அறிவுபோல - கேவல ஞானத்தைப்போல, உலகெலாம் -
இவ்வுலகத்
துள்ளவர்களெல்லாம், அடங்குமேனும் - வந்தடங்கினாலும்,
உள் -
அதனுள்ளகலமானது, இருகாதமாகி - இரண்டுகாத
விஸ்தீர்ணத்தை
யுடையதாகி, மதிலின் -
அப்பூமியின் வெளிப்புறத்தில்
உதயதரமென்னும் மதிலையும் உட்புறத்தில்
பிரீதிதரம் என்னும்
மதிலையுமுடையதாய், நிலவிய - பிரகாசித்த, மூலை -
அப்பூமியின்
வீதிவழிகள் தவிர மூலைகளாகிய
சதுஷ்கோணங்களிலும், நின்ற -
நடுவில் நின்ற, குட்டியங்கள் - மேடைகள், நான்கில் - (கோணத்துக்
கொன்றாக) நாலாகிய அம்மேடைகளையும்
உடையதாகி, பைம் -
பசுமை பொருந்திய, பொன் -
பொன்னாலாகிய, மதிலினை -
ப்ரீதிதரமென்னும் மதிலையும், சூழ்ந்தது - பரிவேஷ்டித்ததாகி, பல -
பலவாகிய விருக்ஷங்களையுடைய, வனமாகி - வன
பூமியென்னும்
பெயருடையதாகி, உண்டு - நாலாம் பிரகாரமாகி யிராநின்றது, எ-று.
(15)
1063. குட்டியத் திரும ருங்குங் கோபுரத் துயர மாகி
யெட்டுள தூபை நின்ற விஞ்சிக்கு ளெட்டே யாகும்
வட்டவெண் குடைய சேதி மரங்களெட்டிவற்றைச் சார்ந்த
வெட்டுள வதனுக் காதி பாதவ மிவற்றி னிப்பால
(இ-ள்.)
குட்டியத்து - (அந்தவன பூமியின்
கோணத்தில்
நடுவிலிரா நின்ற) மேடைகளினுடைய, இருமருங்கும்
- இரண்டு
பக்கங்களிலும், கோபுரத்துயரமாகி - முதல்
கோபுரத்தினுடைய
உயரத்தையுடையதாகி, எட்டுள -
எட்டாயிராநின்ற, தூபை -
ஸ்தூபைகளானவை, நின்ற - நிலைபெற்றுள்ளன,
இஞ்சிக்குள் -
மதிலுக்குள் இராநின்ற அவ்வன பூமியில், எட்டேயாகும் -
மொத்த
ஸ்தூபைகள் எட்டேயாகி யிராநின்றன, (அதாவது : மேடை
ஒன்றுக்கு
இரண்டு ஸ்தூபைகளாகி, நாலு கோணத்துள்ள மேடைகளுக்கும்
எட்டு
ஸ்தூபைகளாகும்). வட்டம் - வட்டமாகிய, வெண் - வெளுப்பாகிய,
குடைய - சத்திரத்தியத்தை
மேலேயுடைய, சேதிமரங்கள் -
(ஜிநபிம்பங்களையுடைய) சைத்ய விருட்சங்கள்,
இவற்றை - இந்த
ஸ்தூபைகளை, சார்ந்த -
சேர்ந்தவைகளாய், எட்டுள -
எட்டாகியிராநின்றன (அதாவது :
அவ்வன பூமியில் ஒரு
கோணத்திலிரண்டு விருட்சமாக நாலு கோணத்திலும்
சேர்த்து எட்டுச்
சைத்ய விருட்சமாகும்), இவற்றினிப்பால் - அவ்வன
பூமியில் இந்த
சைத்ய
விருட்சங்களுக்கிப்பால்,
அதனுக்கு -
அவ்விருட்சக்கூட்டத்திற்கு, ஆதி - முதலிலே, பாதவம் -
கற்பக
விருட்சங்கள், (ஒரு கோணத்திலிரண்டாக), எட்டுள - எட்டுள்ளன,
எ-று. (16)
1064. வீதியைச் சார்ந்து முக்கோண் வட்டநாற் சதுர மாகி
நீதியா னின்ற வாவி யெட்டுமூன் றிவற்றை யெய்தி
|