யோதிய வகையி னென்றிற் குளித்துவாய்
பூசி யொன்றிற்
போதுகொண் டொன்றின் மண்ணோர் பணிவர்போய்த் தூபை யெய்த.
(இ-ள்.)
வீதியைச்சார்ந்து - அவ்வனபூமியில்
மஹா
வீதிகளைச் சேர்ந்து, (அதாவது : வீதியிலிருந்து
கோணத்திற்குப்
போகின்ற வழியில் பிரதமத்தில்), முக்கோண் -
முக்கோணமாகிய,
வாவி - தடாகமும், (அதனப்பியந்தர
பாகத்தில்), வட்டம் -
வட்டமாகிய தடாகமும் (அதற்குள்ளே),
நாற்சதுரமாகி - நாற்
சதுரமாகிய தடாகமும் உண்டாகி, நீதியால் - வரிசையாக
ஒன்றின்பின்
னொன்றாகி, எட்டு மூன்று - அவ்வனபூமியில்
இருபத்துநாலு
தடாகங்கள், நின்ற - நிலைபெற்றுள்ளன. ஓதியவகையின் -
இப்போது
சொன்ன கிரமத்தினாலிராநின்ற, இவற்றை -
இந்தத் தடாகங்களை,
எய்தி - அடைந்து, ஒன்றிற்குளித்து -
முதலில் இருக்கப்பட்ட
முக்கோணமாகிய குளத்தில் ஸ்நானஞ்செய்து, ஒன்றில் வாய்பூசி -
வட்டமாகிய மற்றொரு குளத்தில்
தந்ததாவனஞ் செய்து வாய்
கொப்பளித்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு, ஒன்றில் போது
கொண்டு
- நாற் சதுரமாகிய குளத்தில்
உள்ள புஷ்பங்களைப்
பறித்துக்கொண்டு, மண்ணோர் - இப்பூமியிலுள்ள
மனுஷ்யர்கள்,
தூபையெய்த - ஸ்தூபைகளையடைந்து, பணிவர் - வணங்குவார்கள்,
எ-று. (17)
1065. திரளரைக் கோச மோங்கிச்
சினைகளெண்டிசையு மோடிப்
பருதியோர் கோச மாகிப்
பயின்றகற் பகத்த சோலைக்
கிருமடி யுயர்ந்த சோக மேழிலம் பாலை செண்பகந்
திருமலி மாவுங் கீழைத் திசைமுதன் மாம ரங்கள்.
(இ-ள்.) திரள் -
அடியினின்றும் திரட்சியையுடைய
ஸ்தம்பமானது, அரைக்கோசம்
ஓங்கி - அரைக்குரோசம்
உன்னதமாகி, சினைகள் - அதன்
மேல் கிளைகளானவை,
எண்டிசையும் - எட்டுத் திக்குகளிலும், ஓடி
- சென்று, பருதி -
அப்படிச் சென்ற மேற்பரப்புச் சுற்றளவு
விஸ்தீர்ணமானது, ஓர்
கோசமாகி - ஒரு குரோசமாகி, பயின்ற -
உண்டாகிய, கற்பகத்த
சோலைக்கு - கற்பக விருக்ஷ சோலைக்கு,
இருமடியுயர்ந்த -
இரட்டித்த உன்னதமுடைய, அசோகம்
- அசோகமரமும்,
எழிலம்பாலை - எழிலம்பாலை மரமும்,
செண்பகம் - செண்பக
விருட்சமும், திருமலி - அழகு நிறைந்த, மாவும் - மாமாமும், (ஆக)
கீழைத்திசை முதல் - அவ்வன பூமியில் கிழக்குத்
திக்கு முதலாகப்
பிரதக்ஷிணமாக வரிசைக்கிரமத்தால்,
மாமரங்கள் - பெரிதாகிய
மரங்கள் இராநின்றன, எ-று. (18) 1066. ஆடகத் தியன்றி ரண்டு கோபுரத் தளவுஞ் சென்ற
நாடக சாலை மூன்று நிலையினா லெட்டுப் பந்தி
யூடுசென் றாடு நல்லார் சோதிடர் தேவி மார்கள்
வீடில பலவு, நின்ற வீதியி னிரும ருங்கும்.
|