(இ-ள்.)
(அக்கோபுரத்தினுள் கற்பகவிருட்ச
பூமியின் சதுர்
மஹா வீதிகளிலும்), வடிவுடைப்பீடத்து - பிரதமத்தில் உள்ள நல்ல
ரூபம் பொருந்திய பலிபீடத்திற்கு, இப்பால் - அப்பியந்தரத்தில், மணி
- அழகிய, திரள் - ஸ்தம்பத்தில்,
மலர்ந்த - மேனின்று
விசாலித்ததாகிய, மிக்க - மிகுதியாகிய,
திக்கை - சதுர் மஹா
திக்குகளை, அளப்பன போன்று - அளவிடுவனபோல,
நான்கு
விடவங்கள் - நாலு கிளைகளில், சித்தப்படிமைகள்
- ஸித்த
பிரதிமைகள், இருந்த -
இராநின்றதாகிய, சித்தப்பாதவம் -
சித்தயாதன விருட்சமானது, பயின்ற - நிலைபெற்றிருப்பதாம், போதும்
- அதன் புஷ்பங்களும், குடையின், சத்திரத்தைப்போல, மீதணிந்து -
அப்பிரதிமைகளின் சிரமேலணியப்பட்டு, வீதி
நான்கிலும் - நாலு
மஹா வீதிகளிலும், குலாவும்
- பிரகாசிக்கும், இப்பால் -
அதனப்பியந்தர பாகத்தில், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (37)
1085. அஞ்சுட ருமிழுந் தூபை யறிவனா லயத்தைச் சூழ்ந்த
மஞ்சுற நிமிர்ந்து மாழைத் தலங்கள்பன் னிரண்ட வாகி
யஞ்சன மலையைச் சூழ்ந்த ததிமுக மனைய நான்கா
யிஞ்சிகோ புரங்கணாற்பாலுடையவாந் தடங்கணான்காம்.
(இ-ள்.)
அறிவன் - கேவல ஞானத்தையுடைய பகவானுடைய,
ஆலயத்தை - இருப்பிடமாகிய
கோயிலை, சூழ்ந்த -
பரிவேஷ்டித்திராநின்ற, இஞ்சி கோபுரங்கள் -
கல்யாணதர மதில்
கோபுரங்களினுடைய, நாற்பால் - நான்கு
மஹா திக்குகளிலாகிய
ஆறாம் பிராகாரமாகிய கல்பகவிருட்ச பூமியின்
வீதிகளில், அம் -
அழகாகிய, சுடர் - பிரகாசத்தை, உமிழும் -
சொரிகின்ற, தூபை -
ஸ்தூபைகளானவை, மஞ்சுற - மேகமண்டலத்தைப்
பொருந்த,
நிமிர்ந்து - உயர்ந்து, மாழை - ஸ்வர்ணத்தினாலாகிய, தலங்கள் -
ஸ்தலங்களானவை (அதாவது : நிலைகள்),
பன்னிரண்டவாகி -
பன்னிரண்டையுடையனவாகி,
அஞ்சனமலையை -
நந்தீஸ்வரத்வீபத்தில் இராநின்ற அஞ்சன
பர்வதத்தை, சூழ்ந்த -
சூழ்ந்திராநின்ற, ததிமுகமனைய - ததிமுகபர்வதத்திற்குச் சமானமாகிய,
நான்காயுடையவாம் - நாலாகியிரா நின்றவனவாம், தடங்கள்
நான்காம்
- மற்றும் அந்த வீதிகளில் வீதிக்கு
ஒன்றாக நாலு தடாகங்கள்
உள்ளனவாம், எ-று. (38)
1086. நந்தைபத் திரைச யந்தை
பூரநா மத்த வாவி
வந்தமா திக்கி னான்கில்
வாரியைத் தெளித்த போழ்தின்
முந்தைய பிறப்பை யோர்வார்
முன்பினேழ் பவத்தைக் காண்பார்
சிந்தைசெய் தவற்றைப்
பார்க்கத் தெளிக்கநோ யாவுந் தீரும்.
(இ-ள்.) வந்த
- அந்தக் கல்பக விருட்ச பூமியில் வரப்பட்ட,
மாதிக்கில் - மஹாதிக்கு வீதிகளில் வரிசையாக பூர்வதிசையில்,
நந்தை
- நந்தையென்றும்,
|