சமவசரணச்சருக்கம்517


Meru Mandirapuranam
 

விடங்கள்,    சூழ்ந்த    -  சூழ்ந்திராநின்ற,    சம்பொன் - சிவந்த
பொன்னாலாகிய,      வேதிகையவாகும்      -           சுற்று
மதில்களையுடையனவாகும், எ-று. (47)

 1095. மஞ்சலி பஞ்சமளி யுடையவிட மொருபா
      லுஞ்சன்மிசை யஞ்சொலவ ராடுமிட மொருபால்
      வஞ்சியனை யார்களொடு மைந்தரிட மொருபா
      லிஞ்சியத னகத்தினை யியம்பிடவொ ணாதே.

   (இ-ள்.)    பஞ்சமளியுடைய   -  பஞ்சு  மெத்தைகளையுடைய,
மஞ்சம்  -  கட்டில்களினாலே,  மலி  -  நிறைந்திராநின்ற, இடம் -
இடங்கள், ஒருபால் - ஒரு  பக்கத்திலாகும், உஞ்சல்மிசை - ஊஞ்சல்
பலகையின்மேல், (உட்கார்ந்து  கொண்டு),  அஞ்சொலவர் - அழகிய
சொல்லையுடைய ஸ்த்ரீமார்கள்,  ஆடும்  -  ஊசலாடுகின்ற, இடம் -
இடமானது,     ஒரு     பால்    -    ஒரு    பக்கத்திலேயாகும்,
வஞ்சினையார்களொடு    -    புஷ்பக்கொடிக்குச்     சமானமாகிய
ஸ்த்ரீமார்களோடு, மைந்தர் -  புருஷர்களும், (தங்கும்படியான), இடம்
- இடமானது,  ஒருபால்  -  ஒரு  பக்கத்திலாகும்,  இஞ்சிய  தன் -
கல்யாண தரமென்னும் அந்த மதிலின்,  அகத்தினை -  அப்பியந்தர
பாகத்திலான கல்பகவிருட்ச பூமியை,  இயம்பிடவொணாது - சொல்ல
முடியாது, எ-று. (48)

 1096. மலையனைய நிலையுடைய மாதவர்க ளொருபால்
     விலையமற வெறிதரும விரோசனர்க ளொருபான்
     மலைவின்மொழி நிலையுணல மௌனதர ரொருபா
     னிலைபனியின் வெயின்மழையி னீங்கலில ரொருபால்.

   (இ-ள்.)   மலையனைய   -    பர்வதம்போல்   சலனமில்லாத,
நிலையுடைய   -    ஏகாக்கிரத்தியானத்தில்   நிலைத்து  நிற்கின்ற
நிலையினையுடைய,  மாதவர்கள் - மஹாதபஸையுடைய முனிவரர்கள்,
ஒருபால் -  ஒரு  பக்கத்திலிராநின்றார்கள்,  விலையம்  -  ஸம்ஸார
ஹேதுவாகிய  குற்றங்களெல்லாம்,  அற -  நீங்கும்படி, எறிதரும் -
சேதிக்கின்ற,   அவிர்  -   பிரகாசம்   பொருந்திய,   ஓசனர்கள் -
உபாத்தியாய குணத்தையடைந்தவர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலிரா
நின்றார்கள், மலைவில்  -  மாறுபாடில்லாத,  நல் -   நன்மையாகிய,
மொழி நிலையுள் - தர்ம வசனத்தில் நிலைத்திருக்கின்ற,  மௌனதரர்
- மவுன   விரதத்தைத்  தரிக்கப்  பெற்றவர்கள்,  ஒரு  பால் - ஒரு
பக்கத்திலிரா  நின்றார்கள்,  பனியின் -  பனி  காலத்தும், வெயில் -
கோடை காலத்தும்,  மழையின்  - வர்ஷா காலத்தும், நிலை - நின்ற
யோக  நிலையில்,   நீங்கலிலர் -  நீங்காதவர்களாகிய  காயக்கிலேச
தபமுடையவர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலிரா நின்றார்கள், எ-று. (49)

 1097. உக்கதவர் தித்ததவர் தத்ததவ ரொருபான்
      மிக்கதவர் கோரதவர் மேவுமிட மொருபான்