(இ-ள்.)
(ஒரு நூலில்), முதல் - பிரதமத்திலும்,
இறுதி -
அந்தியத்திலும், நடுவண் - மத்தியிலும், ஒரு பதமது - ஒரு தத்தை,
கொண்டு - தெரிந்துகொண்டு, அந்நூல் - அந்த சாஸ்திரத்தினுடைய,
விதி - கிரமத்தை, முழுதும் -
முழுமையும், அறிஞர் -
அறியும்படியாகிய கோஷ்ட புத்திகளும்,
சிலர் - சில பேர்கள்,
மூலபதம் - முதலிலொரு பதத்தை, மேவி
- பாருந்தி, முதல் -
ஆதியும், நடு - மத்தியும், முடிய
- அந்தியமுமாகிய சகல
விதிகளையும், உணர்வார் - அறிபவர்களாகிய பீஜபுத்திகளும், மதியின்
- புத்தி யதிசயத்தினால், புகை
பன்னிரண்டின் - பன்னிரண்டு
யோஜனை தூரத்திலிருந்தும், வரும் -
உண்டாகி வருகின்ற,
மொழிகள் - வசனங்களை,
அறிவார் -
விவரமாகத்
தனித்தனியாகத் தெரிந்துகொள்பவர்களாகிய,
சம்பின்னமதிகள் -
ஸம்பின்னஸ்ரீாத்திரத்துவ புத்தி பலத்தையுடையவர்களும்,
எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (52)
1100. மதியவதி சுதமிருது விபுலமதி ஞானத்
ததிசயர்க ளனகார கேவலிக ளொருபால்
விதியிலணு மாதிவிகு வணைவலவ ரொருபான்
மதியின்வரு சாரணநன் மாமுனிவ ரொருபால்.
(இ-ள்.)
மதி - மதிஜ்ஞான பலமுள்ளவர்களும்,
அவதி -
அவதிஜ்ஞானிகளும், சுதம் - சுருதஜ்ஞான ஸம்பன்னர்களும், இருது -
ருஜுமதிமனப் பரியய ஞானிகளும், விபுலமதி
ஞானத்ததிசயர்கள் -
விபுலமதி மனப்பரியய
ஞானாதிசயஸமுத் பன்னர்களும்,
அனகாரகேவலிகள் - இதர கேவலிகளும்,
ஒருபால் - ஒரு
பக்கத்திலிருப்பார்கள், விதியில் - கிரமத்தோடு கூடிய, அணுமாதி -
அணுமா முதலாகிய, விகுவணைவலவர்
- விக்கிரியாரித்திப்
பிராப்தர்கள், ஒருபால் - ஒருபக்கத்திலிருப்பார்கள், மதியின் -
சந்திரன் ஆகாயத்திற் சென்று வருவதுபோல,
வரும் ஆகாயத்திற்
சஞ்சரித்து வருகின்ற, சாரண - ஆகாச சாரணத்துவரித்தியையடைந்த,
நல் - நன்மையாகிய, மா - பெருமை பொருந்திய,
முனிவர் -
முனிவரர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலேயிருப்பார்கள், எ-று. (53)
1101. வேதமொரு நான்கைவினை
யத்தைமிக மேவி
யோதுபவர் கேட்பவ ருரைப்பவர்
நிருக்தர்
வாதியர்கள் கற்றமற வாதமதி
யோர்கண்
மேதகைய சிந்தனைகண் மேவுநர்க ளொருபால்.
(இ-ள்.) வேதமொரு
நான்கை - (பிரதமானுயோகம்,
கரணானுயோகம், சரணானுயோகம், திரவ்வியானுயோகம்,
என்னும்)
சதுர் வேதங்களையும், வினையத்தை
மிகமேவி - மிகுதியான
வணக்கத்துடன் கூடி, ஓதுபவர் - படிப்பவர்
|