சமவசரணச்சருக்கம்521


Meru Mandirapuranam
 

யில்,  இனைய -  இத்தன்மையாகச் சொல்லப்பட்ட, முனி - முனிவரர்
கணங்களிரா நின்றார்கள், (அந்த ஆறாம் பிராகாரத்தின் அப்பியந்தர
பாகத்தில்),  வில்லுடைய - பிரகாசம்  பொருந்திய,  (அல்லது   ஒரு
விற்பிரமாண முயரமுள்ள), கனகமணி வேதிகை - ஸ்வர்ணத்தினாலும்
ரத்தினத்தினாலுமாகிய வேதிகையானது, (உண்டு), அதனின் - அந்தக்
கற்பக விருட்சாவனியில், மலி - (மதில்கள் கோபுரங்கள் ஸ்தூபைகள்
முதலியவைகளில்)  நிறைந்திராநின்ற, கொடி - துவஜக்கொடிகளையும்,
இனைய - (இச்சருக்கத்தின் 34 -  வது பாடல் முதலாக இதுவரையில்
வர்ணிக்கப்பட்ட       லக்ஷணங்களையுடைய)    இத்தன்மையாகிய,
நிலங்களை - அந்த ஆறாம்   பிராகாரத்தில்  பலவிதமாக அமைந்த
பூமிகளையும்,  அவ்வேந்தர் -  அந்த மேருமந்தரரென்கிற அரசர்கள்,
பணிந்து - வணங்கி,   ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி, அனகமனராய்
- பாபரஹித சித்தமுடையவர்களாய், இறைஞ்சி - மறுபடியும் வணங்கி,
ஆசிரம் -  (முன்     சொன்ன     கனகமணி  வேதிகையினுடைய
அப்பியந்தரத்தில்   ஏழாம்  பிராகாரமாகிய  கிரஹாங்கண  பூமியின்
மஹா   வீதிகளில்  பிரதமத்திலிரா   நின்ற)    ஜெயாஸ்ரீயமென்னும்
பெயரையுடைய    முகமண்டபத்தை,    அடைந்தார்     - போய்ச்
சேர்ந்தார்கள், எ-று. (56)

வேறு.

 1104. கடித டத்தள வுள்ள வரண்டகைக்
      கொடிநி ரைத்த சயாசிரங் கோசத்தி
      னுடன கன்றதோ ரோசனை யோக்கமுங்
      கடன தாயது காவத மாகுமே.

   (இ-ள்.)   கடிதடத்தளவுள்ள -    துவஜக் கொடிச்   சீலையின்
பேர்      பாதிப்பிரமாணமுள்ள,     வரண்டகைக்      கொடி -
வரண்டகப்பதாகையினால்,   நிரைத்த  - நெருங்கி வரிசை பெற்றிரா
நின்ற,     சயாசிரம்    -    அந்த    ஜயாசிரய   மண்டபமானது,
கோசத்தினுடனகன்றது -   ஒரு     குரோசத்துடனே   பொருந்திய
அகலத்தையுடைய தாய்,   ஓரோசனையோக்கமும்  - உன்னதம் ஒரு
யோஜனையும்,  கடனதாயது  -   பாக்கியாய்   நின்ற   நீளமானது,
காவதமாகும் - ஒரு காதமுமாகும், எ-று. (57)

 1105. மாதி ரத்தெழும் மாமதி வான்கட
      லோத மேற வுடன்புகு மாறுபோ
      னாதன் மாநகர் முன்றிலின் வாய்தல் வாய்ப்
      போது வார்புகு வார்கண் மிடைந்தறார்.

   (இ-ள்.)  மாதிரத்து - ஆகாயத்தில், எழும் - தோன்றுகின்ற, மா
-  சிறந்த,  மதி  - சந்திரனுடைய பிரகாசத்தைப் பெற்ற, (அதாவது :
பூரண சந்திரன் உதயஞ்