524மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

மந்திரத்தையணிந்து   -        அந்த       ஜயாஸ்ரீயமண்டபத்து
அப்பியந்தரமாயுள்ள  உப்பரிகையின்  அப்பியந்தரத்தில்  அழகாகிச்
சேர்ந்து, பொற்பீடிகை -  பொன்னாலாகிய  ஒரு  பீடமிரா  நின்றது,
இடை   -    அப்பீடத்தின்     மத்தியில்,    இந்திரத்துவசம்   -
இந்திரத்துவஜமென்னுங்  கொடிகளானவை,   நின்றன  -     நிலை
பெற்றுள்ளன,   சந்திரபுளகத்து   -   சந்திர   கிரணத்தைப் போல
பிரகாசிக்கின்ற   கண்ணாடியினாலாகிய,   திரளின்  -   அந்ததுவஜ
ஸ்தம்பத்தினது,  இடை  -   உச்சியினின்றும்,   வந்து  -   தாழ்ந்து
வரப்பட்டனவாகி,   நித்திலமாலைகள்  - முத்து மாலைகள், நான்ற -
தொங்கின, எ-று. (63)

 1111. சுந்த ரத்திரண் மாமணி சூடின
     மின்ப ரப்பின் மிளிர்ந்துவில் வீசுவ
     பைந்து கிற்கொடி கால்பொரப் பார்ப்பின
     மந்த ரத்திடை யாடுவ போலுமே.

   (இ-ள்.)    சுந்தரத்து    -      அழகையுடைய,      திரள் -
கண்ணாடியாலாகிய   அந்த    துவஜ    ஸ்தம்பத்தில்,    சூடின -
பதிக்கப்பட்டனவாகிய,   மா   -    பெருமைபொருந்திய,     மணி -
இரத்தினங்கள், மின்பரப்பின் - மின்னல் பரப்பைப்போல, மிளிர்ந்து
- பிரகாசித்து,  வில்  -   கிரணங்களை,   வீசுவ  -   வீசுவனவாம்,
பைந்துகிற் கொடி -  அந்த ஸ்தம்பத்தின் நுனியிலிரா நின்ற அழகிய
துவஜக் கொடியை,  கால்பொர  -  காற்றானது  தாக்க  (அக்கொடி
அசைகின்றதைப்  பார்த்தால்  அது), பார்ப்பினம் - ஹம்ஸ பட்சியின்
கூட்டம்,  அந்தரத்திடை -  ஆகாயத்தில்,  ஆடுவபோலும் - பறந்து
உலவுவதை நிகர்க்கும், எ-று. (64)

 1112. காரின் மீதுல வுங்கத லிக்கொடி
     தார்ம ணிகள் சலிப்ப வொலிப்பன
     வாரி மீது வரும்பரித் தேரிடைத்
     தார்ம ணிகள் சலித்தொலி போலுமே.

   (இ-ள்.)  காரின் மீது - மேக மண்டலத்துக்கு மேலே, உலவும் -
ஆடுகின்ற,   கதலிக்கொடி   -   இந்த   இந்திரத்துவஜக்  கொடிச்
சீலையானது,   சலிப்ப   -   காற்றினால்   அசைந்தாட,  (அதனால்
துஜஸ்தம்பத்தில்     கட்டியிருக்கப்பட்ட),     தார்     மணிகள் -
முத்துமாலைகளும் மணிகளும்,  ஒலிப்பன - சப்திப்பவை, வாரிமீது -
(உதயகாலத்தில்)   சமுத்திரத்தின்   மேல்,   வரும்   -  வருகின்ற,
(சூரியனுடைய), பரித்தேரிடை - குதிரைகள் பூட்டிய ரதத்திலிருக்கின்ற,
தார் - மாலைகளும்,  மணிகள் -  மணிகளும்,  சலித்து  -  சலிக்க,
(அதனாலுண்டாகின்ற), ஒலி - ஒலியை, போலும் - நிகர்க்கும், எ-று.
(65)

 1113. இந்த வான்கொடி யைக்கடந் தேகலும்
     வந்து தோன்று மகோதய மண்டபஞ்