சமவசரணச்சருக்கம்525


Meru Mandirapuranam
 

   சுந்த ரம்மணித் தூணிரை யாயிரத்
   தெந்தை கோயின் முகத்தி னிருந்ததே.

   (இ-ள்.)   இந்த -  இப்போது  சொல்லப்பட்ட  இந்த,  வான் -
பெரிதாகிய,  கொடியை  -  துவஜக்  கொடியை,   கடந்து - தாண்டி
(அப்புறத்தில்),  ஏகலும்  - செல்லலும், வந்து - அவ்விடத்தில் வந்து,
தோன்றும்   -  காணப்படும்,   மகோதய  மண்டபம்  -  மகோதய
மண்டபமானது, சுந்தரம் - அழகிய, மணி - இரத்தினங்களினாலாகிய,
தூணிரை   ஆயிரத்து -  ஆயிரம்  தூண்  சமூகங்களையுடையதாகி
(அதாவது : ஆயிரங்கால்  மண்டபமாகி), எந்தை - ஸ்வாமியினுடைய,
கோயில் -  ஆலயத்தின்,  முகத்தின்  - அபிமுகத்திலே,  இருந்த -
இராநின்றது, எ-று. (66)

 1114. மற்றிம் மண்டபத் துண்மணிப் பீடிகை
     சொற்கி ழத்தி யிருக்கைச் சுதக்கடன்
     முற்றும் வந்தொரு மூர்த்திக்கொண் டாலன்ன
     பெற்றி யாலிருந் தாளை வலத்திரீஇ.

    (இ-ள்.)     மற்று  -   பின்னை,  இம்மண்டபத்துள்  -  இந்த
மஹோதயமண்டபத்தில்,  மணி  -  ரத்தினத்தினாலாகிய,  பீடிகை -
பீடமானது,  சொற்கிழத்தி  -   சரஸ்வதி   தேவியின்,  இருக்கை  -
இருக்கையாகும்,  சுதக்கடல்  -  சுருதஞானமாகிற   சமுத்திரமானது,
முற்றும் -   முழுமையும்,   வந்து  -   இவ்விடத்தில்  வந்து,  ஒரு
மூர்த்திகாண்டாலன்ன  -    ஒரு  உருவமானதற்குச்   சமானமாகிய,
பெற்றியால் - தன்மையினால்,  இருந்தாளை - நிறைந்திருந்தவளாகிய
அந்த சரஸ்வதி தேவியை, வலத்து - தனது வலப்பக்கத்தில்,  இரீஇ -
ஸ்தாபித்துக்கொண்டு   (அதாவது :   தான்    அதற்கிடப்பக்கத்தில்
சேர்ந்து), எ-று.
         
            இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (67)

 1115. சோர்வின் மாதவர் சூழ்சுத கேவலி
     தார கைநடுச் சந்திரன் போல்பவன்
     கார்ப யிர்க்குத வும்படி யாலுயிர்க்
     கார்வ மின்றி யறத்தை யளிக்குமே.

   (இ-ள்.)  சோர்வில்  -  தபசுகளில்  நழுவுதலில்லாத, மாதவர் -
மஹா முனிவரர்கள்,  சூழ்  - தன்னைச்சூழ்ந்திருக்கின்ற, சுதகேவலி -
ஒரு  சுருதகேவலியானவன்,  தாரகை   நடு   -   தாராகணங்களின்
நடுவிலேயிருக்கின்ற,   சந்திரன்   போல்   பவன்  -  சந்திரனுக்குச்
சமானமாகியவனாய்,  கார் - மேகமானது, (மழை பெய்து), பயிர்க்கு -
சஸ்யங்களுக்கு,   உதவும்படியால்   - உதவுவதுபோல,   உயிர்க்கு -
பவ்விய