சமவசரணச்சருக்கம்527


Meru Mandirapuranam
 

    நீதி யாநிதிக் கோக்க ணிரந்தர
    மீதல் மேவி யிருப்ப விரண்டுள.

   (இ-ள்.)   (இன்னும்)   போதறா - மலர்கள் நீங்காத (அதாவது :
புஷ்பங்களினால்  அர்ச்சனைகள் பற்றறாமல் செய்யும்படியான), மணி
- ரத்தின  நிருமிதமான,  பீடத்தின்  -  அந்தப்    பலி பீடத்திற்கு,
அப்புறம் - அப்பால், (உட்சென்றால்),  வாய்தல் வீதியை - வாயிலின்
வழியை,  நோக்கிய  -  பார்த்துக்கொண்டிருக்கின்ற,    மண்டபம் -
அவ்வழியின்   இரண்டு   பக்கங்களிலும்   உள்ள  மண்டபங்களில்,
நீதியால்  -   வரிசையினால்,   நிதிக்கோக்கள்   -  நவநிதிகளுக்கு
அதிபர்களாகிய   குபேரதேவர்கள்,   நிரந்தரம்  -   இடைவிடாமல்,
ஈதல்மேவி -  கொடுக்குந்   தன்மையைப்   பொருந்தி,   இருப்ப -
இருக்கப்பட்டவைகள்,  இரண்டுள -  (மஹா  வீதியினிருபக்கத்திலும்
பக்கத்துக் கொன்றாக) இரண்டு மண்டபங்கள் உள்ளன, எ-று. (71)

 1119. பாட லோடு பயின்றிலை யம்பல
     கூடி நீடு நிலாவொல்லை மின்னெனத்
     தோடு மாடுவ வச்சுர தேவிய
     ராடு நாடக சாலையப் பாலவே.

    (இ-ள்.)   (அப்பால்  அந்தக்   கொடைக்கர   மண்டபத்தைத்
தாண்டி வீதி  வழியாகவே உட்சென்றால் அவ்விடத்தில்), பாடலோடு
- பாட்டுக்களோடு, பயின்று  -   சேர்ந்து, இலையம்பல - மஹாலயம்
பலவும், கூடி - சேர்ந்து, (நர்த்தனத்துடனே), நீடு - பெரிதாகிய, நிலா
- சந்திரகிரணம் பொருந்திய, தோடும் -  கர்ணத்தோடுகளும், ஆடுவ
-   அசைந்தாடக்       கூடியனவாகிய,       அச்சுரத்தேவியர் -
அந்தக்குபேரதேவர்களின்  தேவிமார்கள்,  ஒல்லை  -   சீக்கிரத்தில்
தோன்றும், மின்னென -   மின்னலைப்போல,  ஆடும் -  நர்த்தனஞ்
செய்கின்ற,    நாடகசாலை   -  நர்த்தனச்சாலைகள்,    அப்பால -
அந்தக்கொடைக்கர மண்டபத்திற்கப்பாலுள்ளனவாம், எ-று. (72)

 1120. வெற்றி முற்ற விதிக்கினைத் தூபைக
     ளுற்று நின்றன வோங்கியோ ரோசனை
     சுற்றும் வேறுள வேதிகை தோரணம்
     வெற்றி வெண்கொடி மாலைய மேலெலாம்.

   (இ-ள்.)  (ஏழாம்  பிராகாரமாகிய  அந்தக்கிரகாங்கண  பூமியின்
மஹா     வீதிகளில்     உள்ள     சிறப்புக்கள்   இதுவரையிலும்
சொல்லப்பட்டன.  இனி   அப்பிராகார   பூமியின்    விதிக்குகளில்,
அதாவது கோணங்களில்   உள்ளவற்றைச்  சொல்வாம்), விதிக்கின் -
அப்பிரகார பூமியின்  விதிக்குகளில்  (அதாவது : கோணங்களில்), ஐ
- அழகிய, தூபைகள் - ஸ்தூபைகளானவை, ஓரோசனை