528மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

யோங்கி - ஒரு யோஜனை உன்னதமுடையவையாகி, வெற்றி முற்ற -
(அதைப் பார்த்துக்  கவனிப்பவர்களுக்கு) ஜயம்  அடையும்படி, உற்று
நின்றன - பொருந்தியிரா நின்றன, சுற்றும் -  அவற்றுள்  ஒவ்வொரு
ஸ்தூபையைச் சுற்றிலும், வேறுள - வேறு வேறாக உள்ள, வேதிகை -
மதில்களும்,  தோரணம்  -   துவாரதோரணங்களும்,  மேலெலாம் -
மேலிடமெங்கும்,  வெற்றி - ஜயந்தருகின்ற,  வெண் - வெளுப்பாகிய,
கொடி - துவஜக்கொடிகளும், மாலைய -  புஷ்பமாலை  முத்துமாலை
முதலாகிய மாலைகளும் உடையனவாகும், எ-று. (73)

 1121. அடியி னிற்பிரப் பின்மணை யொத்திடை
     துடியை வென்ற விரிமுழ வின்னல
     வடிவை யொப்பன வையகத் தூபையிப்
     படியி னாகுமற் றுள்ளதுஞ் சொல்லுவாம்.

   (இ-ள்.)      அடியினில்  -     அதோபாகத்தில்,    பிரப்பின்
மணையொத்து -  பிரம்பினால் செய்யப்பட்ட மணைக்குச் சமானமாகி,
இடை -   மத்தியத்தினால்,   துடியை  -  உடுக்கையை,  வென்ற -
ஜயித்ததும், (அதாவது : மத்தியில் மிகவுஞ்சுருங்கிக்குறைந்ததும்), விரி
- பிறகு  விரிந்ததும்,  (ஆகி),  முழவின  -  மத்தளத்தின்,  நலம் -
நன்மையாகிய,  வடிவை  ரூபத்தை, ஒப்பன - ஒத்திராநின்றனவாகிய,
வையகத்தூபை   -   லோகஸ்தூபையும்,   இப்படியின்  -   இந்தக்
கிரகாங்கண   பூமியின்   கோணத்தில்,   ஆகும்   -   உளதாகும்,
மற்றுள்ளதும் - மற்றுமுள்ளதையும்,  சொல்லுவாம்  - சொல்லுவோம்,
எ-று. (74)

வேறு.

 1122. மத்திம லோகமும் மந்த ரத்தையு
     மொத்தவுந் துறக்கநற் கேவை யொப்பவுஞ்
     சித்திசவ் வட்டமுஞ் சித்த ரூபியும்
     பற்றியல் களைத்தெறும் பவிய கூடமும்.

   (இ-ள்.)      மத்திமலோகமும்   -    மத்தியமலோகத்தையும்,
மந்தரத்தையும்    -    மந்தர    பர்வதத்தையும்,    ஒத்தவும்   -
ஒத்திராநின்றனவாகிய    மத்தியம    லோகஸ்தூபையும்     மந்தர
ஸ்தூபையும், துறக்கம் - ஸ்வர்க்க ஸ்தூபையும்,  நல் - நன்மையாகிய,
கேவையொப்பவும் -  நவக்கிரைவேயகத்திற்  கொப்பாகிய  கிரைவே
யகஸ்தூபையும்,  சித்திசவ்வட்டமும் - ஸர்வார்த்த  சித்திஸ்தூபையும்,
சித்த    ரூபியும்    -     ஸித்தஸ்தூபையும்,     பற்றியல்களை -
ஆசைகளாலாகிய     மயக்கத்தின்   இயற்கைகளை,    தெறும்  -
நீக்கும்படியான, பவிய கூடமும் - பவ்வியஸ்தூபையும், எ-று.

         இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (75)