1123. வீத சோகமு மெய்ம்மை விளக்குமென்
றோது நாமத்த வென்றினொன் றுள்ளவாங்
காத பாத மகன்றுவில் லோங்கிமே
லேத மில்வலங் கொள்வட்ட மிங்கிதே.
(இ-ள்.)
மெய்ம்மை - யதாஸ்வரூபத்தை,
விளக்கும் -
பிரகாசிக்கச் செய்கின்ற, வீதசோகமும்
- சோகமற்றதாகிய போதி
ஸ்தூபையும், என்றோதும் - என்று
சொல்லப்பட்ட, நாமத்த -
நாமங்களையுடையனவாகிய இத்தூபைகள், ஒன்றினொன்றுள்ளவாம் -
அந்தஏழாம் பிராகாரத்தின் கோணங்களில்
மஹா வீதிகளின்
ஓரத்திலிருந்து
வரிசையாக
வொன்றுக்கொன்று
அப்பியந்தரங்களிலாகாநின்றனவாம், இங்கிது
- இங்கே இந்த
ஸ்தூபைகள் உள்ள இவ்விடமானது சுற்றிலும்,
காதபாதமகன்று -
கால்காதம் அகலத்தையுடையதாகி, வில்லோங்கி - ஒரு வில்லுயர்ந்து,
மேல் - அதன் மேலே, ஏதமில் - குற்றமில்லாத,
வலங்கொள்
வட்டம் - வந்தவர்கள் பிரதக்ஷிணம் பண்ணுகின்ற இடமாகும், எ-று. (76)
வேறு.
1124. வானவர் கோன்மனத் தெண்ணிச் செய்தவன்
றான்மிக வியப்புறுந் தரணி
தன்மையை
யானிவ ணுரைப்பதற் கெழுந்த
மற்றிது
வூனமே யாகிலு மொழிய வல்லனோ.
(இ-ள்.) வானவர்கோன் -
தேவேந்திரனானவன், மனத்து -
தன்னுடைய மனதில், எண்ணி
- நினைத்து, செய்து -
நிருமிதஞ்செய்து, அவன்தான் - அத்தேவேந்திரன், மிக - மிகுதியாக,
வியப்புறும் - ஆச்சரியப்படும்படியான, தரணி தன்மையை
- இந்த
சமவஸரணத்து சப்த பூமிகளின் ஸ்வரூபத்தை, யான் - நான்,
இவண்
- இவ்விடத்தில், (இப்படிப்பட்ட தன்மையுடையதென்று),
உரைப்பதற்கு
- வர்ணிப்பதற்கு, எழுந்த -
உத்தேசித்த, இது - இந்தத்
தன்மையானது, ஊனமேயாகிலும் - சொல்ல
முடியாததாகிலும்,
மொழியவல்லன் - ஒரு விதத்தில் சொல்ல வல்லமையுடையவனாவேன்
(அதாவது : எனக்குத் தெரிந்தவரையில் ஒரு விதத்தில் சொல்வேன்),
எ-று. (77) 1125. கோசமுங் கோசமு
மிரண்டு கோசமுங்
கோசநான் கெட்டுமுந் நான்கீ ரெட்டுமாய்
கோசமோர் பத்தொடே ழொன்று
மும்மதிற்
கோசமோ ராறுபோய்க் கோயி லெய்தினார்.
|