530மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)    கோசமுங்கோசமும்   -      இரண்டு     குரோச
விஸ்தீர்ணமுடைய  பிராஸாத  சைத்ய பூமியையும், இரண்டு கோசமும்
- இரண்டு குரோசவிஸ்தீர்ணமுடைய  காதிகாபூமியையும், கோசநான்கு
- ஒரு  காத   அகலமுள்ள   வல்லி   பூமியையும்,    எட்டு    -
எட்டுக்குரோசம் (அதாவது : இரண்டுகாத விஸ்தீர்ணமான) உத்தியான
பூமியையும்,   முந்நான்கு   -   பன்னிரண்டு  குரோச  விசாலமான
துவஜபூமியையும், ஈரெட்டு -  பதினாறு குரோசமகன்ற கல்பகவிருட்ச
பூமியையும், ஆய் - ஆராயப்பட்ட, கோசமோர் பத்தோடு ஏழ் ஒன்று
- பதினெட்டுக்  குரோச   விசாலமான   கிரஹாங்கண  பூமியையும்,
மும்மதில் - மூன்று  மதில்களின்  விசாலமாகிய,  கோசம்  ஓராறு -
ஆறு குரோசமும்,  போய்  -  கடந்து  சென்று (அதாவது :  இப்படி
அறுபத்தெட்டுக்   குரோசவகலமான   ஸப்த   பூமிகளையும்   மும்
மதில்களையும்  கடந்துபோய்),  கோயில் - அதனப்பியந்தரத்திலுள்ள
ஸ்ரீநிலயமென்னும்   ஆலயத்தை,   எய்தினார் - மேருமந்தரரென்கிற
இருவர்களும் அடைந்தார்கள், எ-று. (78)

 1126. கார்முக மொன்றுமே லொன்று பத்தோடேழ்
     கார்முகங் குறைந்தமும் மதிலி னோக்கமுங்
     கார்முக மீராயி ரமொன்று மாயபின்
     னீர்மையா லுயர்ந்தன நிலங்க ளென்பவே.

   (இ-ள்.)    ஒன்றுமேலொன்று   -    ஒன்றுக்கொன்று   மேலே
மேலேயாகிய,   ஏழ்நிலங்கள்  -   (இந்தச்  சமவஸரணத்தின்)  ஏழு
பூமிகளும்,  கார்முகம்  பத்தோடு  -  ஒரு  பூமிக்கொரு  பூமி பத்து
வில்லோடு  கூடிய  அளவாய்,  உயர்ந்தன  -   உயர்ந்திராநின்றன,
மும்மதிலின் - மூன்று  மதில்களுடைய, ஓக்கமும் - உன்னதத்தையும்,
கார்முகமும் - இப்படிவில்  அளவினால், (சொல்லுமிடத்தில்), குறைந்த
- பிரமாணத்தினால்  தாழ்ந்திராநின்ற,  ஒன்று -  முதல்   மதிலாகிய
உதயதரமானது,      ஈராயிரங்   கார்முகமாய   -   இரண்டாயிரம்
வில்லுன்னதமாகும்,  பின்  -  பிறகு  உள்ள  இரண்டு  மதில்களும்,
நீர்மையால் - முன்னமே  அந்தந்த  மதில்களைச் சொன்ன இடத்தில்
சொல்லிய வரிசைக்  கிரமத்தின்படி,  உயர்ந்தன  -   உயர்ந்தனவாம்
(அதாவது :  இரண்டாவதாகிய  பிரீதிதரமதில்  நாலாயிரம்  வில்லும்,
மூன்றாவதாகிய  கல்யாணதரமதில் ஆறாயிரம் வில்லுமாக உயர்ந்திரா
நின்றன), என்ப - என்று அறிஞர் கூறுவர், எ-று.

    உயர்ந்தன    என்னும்    பதம்    பூமிக்கும்    மதிலுக்குமாக
இரண்டிடத்திலும் கூட்டப்பட்டது. (79)

வேறு.

  1127. வார்ம லிம்முலை மாதர் நடங்களும்
       கார்ம லிக்கத லிக்கொடி யீட்டமுஞ்