ஒசனை மூன்றரையகன்றது
- (சப்த பூமியும்
தாண்டி
மத்தியத்திலிருக்கப்பட்ட ஸ்ரீ
நிலயமானது) பதினாலு
காதம்
அகலத்தையுடையதாகும், ஓங்கியது
- உன்னதமானது, கீழ் -
அங்ஙனம் பதினாலு காதமகன்ற அடியினின்றும்,
மேல் - ஸ்ரீ
நிலயத்தின் கோபுரசிகரபரியந்தம்,
ஓசனை நான்கு கோசமைந்து -
நாலு யோஜனையும் ஐந்து குரோசமும்,
ஓங்கியது - உயர்ந்ததாம்,
பத்து - பத்துமாற்றாகிய,
பொன் - ஸ்வர்ணத்தினாலும்,
ஈரெட்டுமாசிலா - பதினாறு தோஷநீங்கின,
மணியினால் -
இரத்தினங்களினாலும்,
(நிருமிதமாகி),
ஆசைபோல் -
ஆசையைப்போல், (அளவில்லாமல்), பரந்த
- விசாலித்த, வில்
அவயவத்ததாம் - கிரண சமூகங்களையுடையதாகும், எ-று. (85)
1133. தலந்தன்மேற் சகதிகண் மூன்று தம்மிசை
யிலங்குபட் டிகையுமைஞ் ஞூறு விற்களை
விலங்ககன் றுயர்ந்தன வேறு
வேறொளி
மலர்ந்துவிற் பயின்றுவச்
சிரம யங்களாம்.
(இ-ள்.)
தலந்தன் மேல் - அந்தப் பதினாலு காதவகலமுடைய
பூமியின் மேல், சகதிகள் மூன்று - மூன்று ஜகதீ தலங்கள்,
தம்மிசை
- ஒன்றுக்கொன்று தங்கள் மேலே, இலங்கும் -
விளங்காநின்ற,
பட்டிகையும் - மேகலைகள் போல
சூழப்பட்டனவாயும், வேறு
வேறு - தனித்தனியாக, (ஒவ்வொரு ஜகதியும்), அஞ்ஞூறு விற்கள் -
ஐஞ்ஞூறு விற்களின் அளவு, விலங்ககன்று
- ஒவ்வொன்றும்
இடைவிட்டு விசாலித்து,
உயர்ந்தன -
யோக்கியமான
உன்னதத்தையுடையனவாயும், ஒளிமலர்ந்து
- பிரகாசத்தினால்
விசாலித்து, வில் - கிரணங்களை, பயின்று - நீங்காமல் சேர்ந்து,
வச்சிரமயங்கள் - வஜ்ராத்ன மயங்களாக, ஆம் - விளங்குவனவாம், எ-று. (86) 1134. மார்பள
வுயர்ந்தபொன் வரண்ட கத்தின்மேற்
கார்முகஞ் சகதியின் கதலி
கட்கிடை
பாரவிற் பத்திடை கூடங் கோட்டக
நீர்மையாற் றனுமுப்ப திரட்டி
நீண்டவே.
(இ-ள்.) சகதியின்
- அந்த ஜகதீ தலங்களில், மார்பளவு -
மார்பளவாய், உயர்ந்த - உயர்ந்திராநின்ற, மேல் -
மண்டபங்களின்
மேல் விளிம்புகளில், (இராநின்ற), பொன் - அழகிய,
வரண்டகத்தின்
கதலிகட்கு - வரண்டகத் துவஜங்களுக்கு, இடை - நடுவில்,கார்முகம்
- ஒரு வில் பிரமாணமாம், (அதாவது : அவை ஒரு வில்
பிரமாணம்
இடை விட்டு ஒவ்வொன்றாயிருக்கும்), (இன்னும்
அம்மண்டபங்களின்
மேலே), பாரம் - பெரிதாகிய,
வில்பத்திடை - பத்து
வில்லிடையையுடைய, (அதாவது : பத்துவில்லளவு
இடைவிட்ட),
கூடம் - கூடங்களும், கோட்
|