சமவசரணச்சருக்கம்545


Meru Mandirapuranam
 

நூறு  -  இருநூற்றிரண்டு   இருநூற்றிரண்டாக, குறைந்து - குறைந்து,
சென்னி  -    மேனிலையாகிய    முந்நூற்றெழுபத்தைந்தாநிலையில்,
இரண்டினோடிரண்டு      நூறாம்    -           இருநூற்றிரண்டு
வரண்டகக்கொடிகளாகும்,   வரண்டகப்பதாகை  -    இப்படியாகிய
வரண்டகத்துவஜங்களின்,   தொகை  -  மொத்தத்   தொகையானது
(எவ்வளவென்றால்), ஒரு கோடி  நாற்பத்திரண்டு  லக்கங்கள் - ஒரு
கோடியே நாற்பத்திரண்டு லக்ஷங்களுடன் சேர்ந்த, நாற்பத்தோராயிரம்
- நாற்பத்தோராயிரமும்,     இவற்றினோடு    -       இவற்றோடு,
நூற்றுநாற்பத்துநான்கும் -   நூற்றுநாற்பத்துநாலும்,  ஆம் -  ஆகும்,
எ-று.

     இதில் இருபதினாயிரத்து முந்நூற்று நாற்பத்துநாலு ஜாஸ்தியாகச்
சொல்லியிருக்கிறது. (113)

 1161. வரண்டகம் மண்ட லத்தின் வந்தவக் கொடியின் குப்பை
     இரண்டையுந் தொகுப்பக் கோயிற் கொடியின தீட்ட மாகுந்
     திரண்டுவந் திழியுந் தேவர் சித்திர கூடங் காணா ருண்டுநின்
     றுரைப்பர் வையத் தில்லதோர் வடிவி தென்றே.

   (இ-ள்.)   வரண்டகம்  -   வரண்டகத்திலும்,   மண்டலத்தின் -
மேடைகளிலும்,   வந்த   -  வரப்பட்ட,  அக்கொடியின்  -  அந்த
துவஜங்களினது,   குப்பை   இரண்டையும்  -   கும்பல்களிரண்டின்
தொகைகளையும்,  தொகுப்ப  -  ஒன்றாகச்  சேர்த்துக்  கூட்ட வந்த
தொகையானது,  கோயில்  - ஸ்ரீநிலைய கோபுரத்தின், கொடியினது -
த்வஜங்களது,    ஈட்டமாகும்  -  சமூகங்களாகும்,  திரண்டுவந்து  -
கூட்டங்களாக வந்து, இழியும் - இச்சமவசரணத்தில் சேர்கின்ற, தேவர்
- அமரர்கள்,  சித்திர  கூடம் -  விசித்ரமாகிய   சிகரங்களையுடைய
இக்கோபுரத்தை,  காணா  -  பார்த்து,  மருண்டு  நின்று - பிரமித்து
நின்று,  இது  -  இந்த   ஸ்ரீ   நிலையமானது,  வையத்து  -  இந்த
லோகத்தில், இல்லது - வேறெங்கும்  இல்லாததாகிய,  ஓர் - ஒப்பற்ற,
வடிவு - ஸ்வரூபமாகும், என்றுரைப்பர் - என்று சொல்வார்கள், எ-று. (114)

 1162. தேவரை வியப்பு றுக்குஞ் சித்திர கூடஞ் செம்பொற்
      காவத மிரண்டு யர்ந்த வாய்தல்க ளகன்ற காதம் அகன்ற
      மூவுல கத்தி னல்ல மணிமுத்தின் வைரத்து ஆய காவலர்
      முடிகள் போலுங் குடுமிய கதவ மெல்லாம்.

     (இ-ள்.)   தேவரை - சதுர்ணிகாயாமரர்களை, வியப்புறுக்கும்
-  ஆச்சரியப்படுத்தும்படியான,  சித்திரகூடம் -   இந்தச் சித்திரகூட
மண்டபமானது,  (ஸ்ரீ  நிலையமென்றும்   லக்ஷ்மீவரமண்டபமென்றும்
பெயர்கள்   கூறப்பட்டு,   சுவர்   போக  உள்ளே  பன்னிரு  காத
விஸ்தீர்ணமுடையதாகி   மேலே   மேலே   முந்நூற்றெழுபத்தைந்து
நிலைக்கோபுரத்தையுமுடையதாகி    இதில்  நாலு  காதம்  உயர்ந்த
சுவரில்), எல்லாம் -