கள், கடக்க எண்ணும் - நீங்கிச்செல்ல நினைக்கும், மாற்றிது -
மாற்றமாகிய இந்த ஸம்ஸார சுழற்சியானது, குற்றமோர் மூன்று - (ராக,
த்வேஷ, மோஹமென்னும்) முக்குற்றங்களால், நான்குகதிகளில் -
சதுர்க்கதிகளில், பொறிகளைந்தில் - பஞ்ச இந்திரியங்களில், பற்றிய - சேர்ந்த, காயம் ஆறில் - (பிருத்வி, அப்பு, தேயு, வாயு, வனஸ்பதி,
த்ரஸ, காயமென்னும்) ஷட்சீவ நிகாயங்களில், பழவினைத்
திரிவோரேழில் - சப்த பரிவர்த்தனைகளில், சுற்றிய - சேர்ந்திராநின்ற,
வினைகளெட்டில் - அஷ்ட கர்மங்களில், தோற்றிய - உண்டாகிய,
சுழற்சி - சுழற்சியாகும், எ-று.
பஞ்சபரிவர்த்தனைகளோடு ரூபம்,
நாமம்
என இரண்டு சேர்ந்து
எழு பரிவர்த்தனைகளாகும்; இதன் விவரம் பதார்த்தசாரம், அஷ்ட
பதார்த்தம் முதலிய கிரந்தங்களில் தெளிவாகக்
காணப்படும்.கண்டாய்
- அசை. (114)
115. எழுகயி றகன்று மீரேழ் கயிறுயர்ந் திடையி லொன்றாய்
முழவென விடையி லைந்தாய் முடியொன்றா யடியி லேழா
யழிவிலா வுலகிற் றோற்ற மனந்தமாம் படிப்ப தேச
மெழுவெனத் திரண்ட தோளா யிறந்தநாட் பிறந்த வென்றான்.
(இ-ள்.) எழுவென- ஸ்தம்பம்போல், திரண்ட - திரட்சிபெற்ற,
தோளாய் - புயத்தையுடைய குமாரனே!, எழுகயிறகன்று -
(உத்தரதக்ஷிண வியாஸமானது) சப்தரஜ்ஜு ப்பிரமாணமாகி, ஈரேழ்
கயிறுயர்ந்து - பதினாலுகயிறுன்னதமாகி, இடையில் - உயரத்தின்
பாதியாகிய மத்தியமலோகத்தில், ஒன்றாய் - (பூர்வாபரவியாஸம்) ஒரு
ரஜ்ஜு வாகி, முழவென - (இதற்குமேல்) மத்தளம்போன்ற, இடையில்-
ஊர்த்துவலோக மத்தியமாகிய விடத்தில் (அதாவது மத்திம
லோகத்தினின்றும் மூன்றரைக்கயிறுயர்ந்த பிரம்ம கல்பத்துச்சியில்),
ஐந்தாய் - (பூர்வாபரவியாஸம்) பஞ்சரஜ்ஜு வாகி, முடி - அந்த
லோகத்தினுடைய உச்சியில், (பூர்வாபரவியாஸம்) ஒன்றாய் - ஒரு
கயிறாகி, அடியில் - அதோலோகத்தின் அடியிலே, ஏழாய் -
(பூர்வாபரவிஸம்) ஏழுகயிறாகி, படிப்பதேசம் - (இந்தக்
கணக்கினால்
முந்நூற்று நாற்பத்துமூன்று ரஜ்ஜு ப்ரமாணமாகிய)
லோகப்ரதேசமென்னும், அழிவில்லா - கெடாத, உலகின்தோற்றம் -
இந்த வுலகத்தினுடைய தோற்றத்தில், இறந்தநாள் - நாம் சரீரத்தை
விடுத்தநாள்களும், பிறந்தநாள் - வேறொரு சரீரத்தை எடுத்துப்பிறந்த
நாள்களும், அனந்தமாம் - எண்ணிலவாம், என்றான் - என்று
வைஜயந்தன் சொன்னான், எ-று.
நாள் இரண்டிடத்துங்
கூட்டப்பட்டது. (115)
116. என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த்
திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலின் மூடி யழுக்கொடு புழுக்கள் சோரு
மொன்பது வாயிற் றாய வூன்பயில் குரம்பை தன்மே
லன்பறா மாந்தர் கண்டா யறிவினாற் சிறிய நீரார்.
|