யுடைய பகவனுடைய,
கந்த குடிய மாளிகை -
கந்தகுடி
மாளிகையானது, இதாம் - இத்தன்மையுடையதாகும், எ-று. (131)
வேறு.
1179. குடதிசைக் கொடிநிறை பீடத் தின்மிசை
யடிநிலாய்ப் பிண்டிவில் லறுப
தோங்கிமேற்
கடியுலா மலர்மிடை கவடு கந்தமா
குடியினைச் சூழ்ந்துபோய்க் குலாவி நின்றதே.
(இ-ள்.)
கொடிநிறை - த்வஜங்களினால் நிறைந்த,
பீடத்தின்
மிசை - த்வீதிய பீடமான த்வஜ பீடத்தின் மேலே, குடதிசை -
மேல்
பக்கத்தில், அடி - அடியானது, நிலாய் -
நிலைபெற்று, பிண்டி -
அசோக விருட்சமானது, வில்லறுபது - அறுபது
வில்லு, ஓங்கி -
உன்னதமாகிய அடித்திரள் ஸ்தம்பமாகி, மேல் - அதற்கு மேலே, கடி
- வாசனையானது, உலாம் - வியாபித்திராநின்ற, மலர் -
புஷ்பங்களினால், மிடை -
நெருங்கியதாகிய, கவடு -
கிளைகளானவை, கந்தமா குடியினை - கந்தகுடி
மண்டபத்தை,
சூழ்ந்து போய் - சூழப்பட்டதாகிப்போய்,
குலாவி - பிரகாசித்து,
நின்றது - நிலைபெற்றுளது, எ-று. (132)
1180. முத்தமா மணிமுதன் மாலை தாழ்ந்து
பூந்
தொத்துமேற் றதைந்நதன சுரும்பு
வண்டுதேன்
றத்தியின் பிரசமுண் டெழுவ
தம்மொலி
மொய்த்தலாற் கடன்முகின் முழக்க மொக்குமே. (இ-ள்.)
முத்தமா மணிமுதல் - முத்து
சிறந்த ரத்தினம்
ஆகியவற்றாலாகிய மாலைகள் முதலாக, மாலை - பலவிதமான புஷ்ப
மாலைகளும், தாழ்ந்து -
அந்த அசோக விருட்சத்தில்
அலங்கிருதமாகத் தொங்கி, பூந்தொத்து
- புஷ்பக்கொத்துகளும்,
மேல் - மேலெங்கும், ததைந்தன - நெருங்கி நிறைந்தன, சுரும்பு -
சுரும்பினங்களும், வண்டு - வண்டினங்களும்,
தேன் - தேன்
கூட்டங்களும், தத்தி - அப்புஷ்பக் கொத்துகளில்
பாய்ந்து, இன் -
இனிமையாகிய, பிரசம் - மதுவை, உண்டு
- குடித்து, எழுவ -
எழும்பிப் பறக்கின்றனவாம், தம்மொலி - அவைகளின் சப்தங்கள்,
மொய்த்தலால் - நெருங்கி முழங்குவதால், கடல் - சமுத்திரத்தினதும்,
முகில் - மேகத்தினதும், முழக்கம் -
கர்ஜனையை, ஒக்கும் -
ஒத்திருக்கும், எ-று. (133) 1181. தருவலி தலநல
தடத்தின் மீதெலா
விருதுவு மலர்மல ருட னலர்ந்திலை
|