மரகத மணிகளாய் முறிகள் வான்றளி
ரருமணி யாலின் றசோக நின்றதே.
(இ-ள்.)
தரு - அவ்வசோக மரத்தின், வலி
- பலம்
பொருந்திய, தலம் - பெரிதாகிய, நலம் - அழகுள்ள, தடத்தின் -
கிளைகளினது, மீது - மேலே, எலாவிருதுவும்
- ஷட்ருதுக்
காலங்களிலும், மலர் - புஷ்பிக்கும்படியான,
மலர் - புஷ்பங்களை,
உடன் - ஒரு தன்மையாக, அலர்ந்து - மலர்ந்து, இலை - இலைகள்,
மரகத மணிகளாய் - பச்சை ரத்தினங்களால் செய்தனவாகி, வான் -
அழகிய, முறிகள் பெருந்துளிர்களும், தளிர் -
சிறு துளிர்களும்,
அரும் - அரிதாகிய, மணியால் - பத்மராகரத்தினத்தினால், இயன்று -
பொருந்தியதாய், அசோகம் - அந்த அசோக விருட்சமானது,
நின்றது
- இவ்விதமாக நிர்மிதமாகி யிரா நின்றது, எ-று. (134)
1182. முத்தம்வாய்ச் செறிந்தன நிறைந்த மும்மதி
யொத்துமூ வுலகினுக் கிறைமை யோதுவ
பத்தியிற் குயின்றது நிலாவி ரிந்துமேற்
சித்திமா வேந்தைமுக் கவிகை சேர்ந்தவே.
(இ-ள்.) முத்தம் - முத்து மாலைகளை, வாய் - விளிம்புகளில்,
(சூழ), செறிந்தன - சேர்ந்திராநின்றனவாகி, நிறைந்த - நிறைவு பெற்ற,
மும்மதி - மூன்று சந்திரனை, பத்தியில்
- ஒன்றின்மேலொன்றாக
வரிசை பெற, குயின்றது - செய்து வைத்ததற்கு, ஒத்து - ஒப்பாகி,
மூவுலகினுக்கு - இந்த மூன்று
லோகத்திற்கும், இறைமை -
எஜமானத்துவத்தை, ஓதுவ - சொல்வனவாகி, நிலா - கிரணமானது,
விரிந்து - விசாலித்து, மேல் -
மேலே, சித்தி மாவேந்தை -
ஸித்தியடையும்படியாகிய ஜினேந்திரனை,
முக்கவிகை -
சத்திரத்திரயமானது, சேர்ந்த - அடைந்து
நிழற்றப்பெற்றன, எ-று. (135)
1183. புண்டரீ கத்தொடு புணர்ந்த சாயைபோற்
பிண்டியின் கொழுநிழற் பிரம மூர்த்திபின்
மண்டலம் மலரடி வணங்கிப் பின்றனைக்
கண்டவர்ப் பிறவியேழ் காண நின்றதே.
(இ-ள்.) பிண்டியின் -
அந்த அசோக விருட்சத்தினுடைய,
கொழுநிழல் - செழுமை பெற்ற நிழலிலே,
பிரம மூர்த்தி பின் -
ஸ்வாமியின் பின்னாலே, புண்டரீகத்தொடு
- (ஸ்வாமியானவர்
இராநின்ற) செந்தாமரைப் புஷ்பத்தோடு, புணர்ந்த - சேர்ந்திராநின்ற,
சாயை போல் - ஜோதிக்கு
ஒப்பானதாக, மண்டலம் -
பிரபாமண்டலமானது, மலரடிவணங்கி -
ஜினேந்திரனுடைய பாத
தாமரையை
|