(இ-ள்.) (அந்த
கரங்கள் முன் குவிந்த - சுவாமியைக்கண்ட
காலத்தில் இவர்களுடைய கைகள்
முன்னே குவிந்தன,
உள்ளக்கமலங்கள் - இருதய கமலங்கள்,
விரிந்து - மலர்ந்து,
கண்ணீர் - ஆனந்தக்கண்ணீர்த்துளிகள்,சொரிந்தன -
சொரிவுற்றன,
ரோமம் - சரீர மயிர்களில், புளகங்கள்
பரந்த - சிலிர்ப்புக்கள்
உண்டாயின, வாய்ச்சொல்
- வசனங்கள்,
அரிந்தன -
குழறப்பட்டனவாகி, துடித்த - துடித்த, காதல் - ஸ்வாமி
பக்தியாகிற
ஆசையானது, சுரந்த - மிகுந்தது, அடி - பாதங்கள், முறையிடுதல் -
அதற்குமேல் கிரமமாகப் பெயர்த்து வைத்தல், ஓய்ந்தன - ஓய்வுற்றன,
(அப்போது), இரவிமுன் -ஸூர்யனுடைய எதிரில், (உண்டாம்), இருளை
யொத்து - அந்தகாரத்தை நிகர்த்து (அதாவது :
இருளில்லாமல்
நீங்கிவிடுவது போல), வினைகளெல்லாம் -
கர்மங்களெல்லாம்,
இரிந்தன - கெட்டு நீங்கின, எ-று. (141)
1189. தும்பமார் நேமி ஞான காட்சிநல் லொழுக்க மாய
சம்பவன் முன்பு நின்ற தருமசக் கரத்தி னும்பர்
மைந்தரா னவர்க ளேறி வலங்கொண்டர்ச் சனையின் முற்றித்
தும்பிபோற் பணிந்தெ ழுந்து வாழ்த்துபு தொடங்கி னாரே.
(இ-ள்.)
தும்பம் - பிரகாசம், ஆர் -
நிறைந்த, நேமி -
ஸமவஸரண மண்டலத்திலிராநின்ற, ஞானக்காட்சி
நல்லொழுக்கமாய
- க்ஷாயிக ஞான தர்சன சாரித்திரமாகிய,
சம்பவன் - ஆத்மகுண
ஸ்வபாவஸம்பவனாகிய பரமாத்ம ஸ்வரூபமடைந்த
ஜினேந்திரனுடைய,
முன்பு - எதிரிலே, நின்ற - நிலை பெற்ற, தருமசக்கரத்தின் உம்பர் -
தர்மசக்கரம் இராநின்ற சக்கர பீடமாகிய
பிரதம பீடத்தின் மேலே,
மைந்தரானவர்கள் - மேருமந்தரரென்கிற இவ்விருவர்களும், ஏறி -
ஏறி, வலங் கொண்டு - பிரதக்ஷணமாக வந்து, அர்ச்சனையின் முற்றி
- அஷ்டவிதார்ச்சனைகளைச் செய்து முடித்து,
தும்பி போல் -
யானையானது படிந்து படுப்பது போல, பணிந்து -
சாஷ்டாங்கமாக
வணங்கி, எழுந்து - எழுந்து நின்று,
வாழ்த்துபு - ஸ்துதி
சொல்வதற்கு, தொடங்கினார் - ஆரம்பித்தார்கள், எ-று. (142)
வேறு.
1190. காமாதி கடந்ததுவுங் கைவலப்பெண்
ணடைந்ததுவுங் கமலப் போதிற்
பூமாரி பொழியவெழுந் தருளியதும்
பொன்னெயின்மண் டலத்த சோகந்
தேமாரி மலர்பொழியச் சீயவணை
யமர்ந்ததுவுந் தேவர் கோமான்
றாமாதி யணிந்துபணிந் தெழுந்ததுவுந்
தத்துவமென் றகவோ வென்ன.
|