56மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   உதிரம் தோய்த்து - இரத்தத்தை ஊறவைத்து, நரம்பில்
-    நரம்புகளினால்,   என்பினை   -   எலும்புகளை,   பின்னி  -
தொடுத்துக்கட்டி, இறைச்சி - மாமிசத்தை,மெத்தி - அப்பி (அதாவது :
பூசி),  புறம் - மேலே, புன் - அற்பமாகிய, தோலின் - சர்மத்தினால்,
மூடி   -   போர்த்து,  அழுக்கொடு  -  மலங்களோடு,  புழுக்கள் -
கிருமிகளும்,    சோரும்   -   சொரியும்,   ஒன்பது   வாயிற்றாய -
நவத்துவாரங்களையுடையதாகிய,   ஊன்  பயில்  -  நிணம் சேர்ந்த,
குரம்பைதன்மேல்     -     ( அசுசித்வத்தையுடைய )   சரீராமாகிய
குடிசையின்பேரில்,  அன்பு  -  ஆசை,  அறா  - நீங்காத, மாந்தர் -
மனுஷ்யர்கள்,  அறிவினால்  -  ஞானத்தினால், சிறியநீரார்  - அற்ப
குணத்தை      யுடையராவர்,       எ-று.

     சீவகசிந்தாமணி கனகமாலையாரிலம்பகம்  21-வது செய்யுளினும்,
இப்பாடலின்  கருத்து   அமைந்திருத்தலோடு   அச்செய்யுளடிகளும்
இப்பாடலடிகளோடு ஒத்திருத்தல் காண்க.                   (116)

 117. தோன்றிமாய்ந் துலக மூன்றிற் றுயரெய்து முயிர்க டம்மை
     ஈன்றதாய் போல வோம்பி யின்பத்து ளிருத்தி நாதன்
     மூன்றுல கிற்கு மாக்கி முடிவிலாத் தன்மை நல்கு
     மான்றநல் லறத்தைப் போலு மரியதொன் றில்லை யென்றான்.

    (இ-ள்.) தோன்றி - பிறந்தும், மாய்ந்து - இறந்தும், உலகமூன்றில்
- மூன்றுலோகத்திலும்,  துயரெய்தும் - துக்கத்தையடையும், உயிர்கள்
தம்மை - ஜீவன்களை, ஈன்றதாய்போல - பெற்றதாயைப்போல, ஓம்பி
- இரட்சித்து, இன்பத்துள் - தேவாதிசுகங்களில்,இருத்தி - ஸ்தாபித்து,
மூன்றுலகிற்கும்  -  மூன்று  லோகத்திற்கும்,  நாதன்  -  நாதனாகிய
அரகந்த   பதவியையும்,   ஆக்கி   -   உண்டாக்கி,   முடிவிலா -
அழிவில்லாத,  தன்மை  - ஸித்தபதவியையும், நல்கும் - கொடுக்கும்,
ஆன்ற  -  பெரிதாகிய,  நல் -  நன்மையாகிய, அறத்தைப்போலும் -
ஸ்ரீஜிந  தர்மத்தைப்போலும்,  அரியது  -  அருமையானது,  ஒன்று -
வேறொன்று,  இல்லை  - (இவ்வுலகில்)  இல்லை,  என்றான் - என்று
வைஜயந்தன் கூறினான், எ-று. (117)

                        வேறு.

 118. அரியது திருவற மல்ல தில்லையேல்
     மருவிய திருவற மொருவி மன்னனா
     யுருகெழு முடிகவித் துலக மாள்வது
     பெருவிலை மணியினைப் பிண்டிக் கீவதே.

   (இ-ள்.) (இவற்றைக்கேட்டுச் சஞ்சயந்தன்) அரியது - (இவ்வுலகில்)
அருமையானது,   திருவறம்   அல்லது  ஸ்ரீஜிந  தருமமேயல்லாமல்,
இல்லையேல்    -   மற்றொன்று   மில்லையானால்,   மருவிய   -
சேர்ந்திராநின்ற, திருவறம் - அந்த ஸ்ரீஜிந தர்