566மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

நிர்க்கந்த ரூபமாகிற  ஜினதீக்ஷையை,  அருளு - தயவுடன் அளிக்கக்
கடவாய்,  வாழிநீ -  நீ  வாழக்கடவாய்,  என்று  - என்று சொல்லி,
இறைஞ்சிடா - வணங்கி, எ-று. தெப்பை, நீண்டது.  இதுவும் அடுத்து
செய்யுளும் குளகம். (154)

 1202. முடிகளுங் கடகமு முத்தின் பூண்களுங்
      கடிமிசைக் காஞ்சியு நாணு மாடையும்
      வடிவுடைத் தடக்கையால் வாங்கி விட்டவை
      விடுசுடர் விளக்கின்முன் னிமைத்து வீழ்ந்தவே.

   (இ-ள்.)   முடிகளும்  -  கிரீடங்களும்,  கடகமும்  -   அஸ்த
கங்கணங்களும்,   முத்தின்    பூண்களும்  -  முத்தாபரணங்களும்,
கடிமிசை    -    அரையின்மேலணியும்   படியான,   காஞ்சியும் -
மேகலாபரணமும்,  நாணும்  -  அரைநாண்கயிறும்,   ஆடையும்  -
வஸ்திரங்களும்,  வடிவுடை  -  ரூபம்  பொருந்திய, தடக்கையால் -
விசாலித்த  தங்களுடைய   கைகளால்,   வாங்கிவிட்டு -  நீக்கிவிட,
அவை  -  அவ்வாபரணாதிகள்,  விளக்கின்முன்  -  தீபத்தினுடைய
எதிரில்,  விடு - விளக்கினின்றும் விழுகின்ற, சுடர் - தீபச்சுடர்போல,
இமைத்து - விளங்கி, வீழ்ந்த - வீழ்ந்தன, எ-று. (155)

 1203. குறுநெறி பயன்றெழு குஞ்சி யஞ்சொலார்
      நெறிமையை யறநெறி நினைப்ப நீக்குமென்
      றறிவன தடிமுத லைம்ப தஞ்சொலா
      நெறிமையி னீக்கினார் நீண்ட தோளினார்.

   (இ-ள்.) நீண்ட -  நீட்சியுடைய,  தோளினார் - கைகளையுடைய
இவ்விருவரும்,      அஞ்சொலார்  -  அழகிய    சொல்லையுடைய
ஸ்த்ரீமார்களால், குறுநெறி பயின்று - வகுப்பெடுத்து வார்தல் முதலிய
சிறு வழிப்பாடுகளை  யடைந்து,  எழும் - வளர்ந்திராநின்ற, குஞ்சி -
தலையின் மயிரினது,  நெறிமையை - வழிப்பாடாகிய போற்றுகையை,
நினைப்ப -   எண்ண,  அறநெறி  -  ஜின  தர்மத்தின்  வழியாகிய
ஸம்மியக்தர்சன ஞான   சாரித்திரங்களை,  நீக்குமென்று  - விலக்கி
மித்தியாத்துவ மயக்கத்தைச் செய்து விடுமென்று பாவித்து, அறிவனது
- அருகபரமனது, அடி முதல் - பாதமுதலாக,  ஐம்பதம் -    1பஞ்ச
பரமேஷ்டிகளுடைய பதத்தை, சொலா -  உச்சரித்து,  நெறிமையின் -
2ஜினதீக்ஷா     விதிமுறையின்படி,  நீக்கினார் -  (அவ்வுரோமத்தை)
பரிஹரித்து விட்டார்கள், எ-று.

    1பஞ்ச    பரமேஷ்டிகளின்   ஸ்வரூபங்களையும்  பாவனையின்
லக்ஷணங்களையும்  பதார்த்த  சாரத்தில்  முப்பதாவது அதிகாரத்தில்
கண்டு கொள்க.

    2ஜினதீக்ஷையின்    விதி   முறைகளை   ஆசாராங்கமென்னும்
புஸ்தகத்தில்     யதியாசாரமென்னும்      பகுதியில்     பார்த்துத்
தெரிந்துகொள்க. (156)