போதியாறு - ஆறுவிதமாகிய புத்திரித்தியும், ஐந்துமாமருந்து -
ஐந்து
விதமாகிய ஒளஷதரித்தியும், மாதவம் - பெரிதாகிய தபோரித்தியும்,
நீதியால் - வரிசையினாலே, நாற்சுவை - நாலுவிதமான ரஸரித்தியும்,
வலிகள் மூன்று - த்ரிப்பிரகாரமான
பெலரித்தியும், இரண்டு -
இரண்டு விதமாகிய, குறைபடாவுறையுள்
- அக்ஷீண
மஹாலயத்துவமும், ஊண் - அக்ஷீண மஹாசனத்துவமு
மென்னும்
அக்ஷீணரித்தியும், ஆதியாம் - முதலாகியவைகளாம், எ-று.
இந்தரித்திகளின் விவரங்களை பதார்த்த ஸாரத்தில் முப்பதாவது
அதிகாரத்தில் பார்த்துக்கொள்க. (159)
1207. துவர்ப்பசை நான்கொடு தொடர்ந்த பத்துமா
சுவர்ப்புநீ ரார்கழீஇ யுள்ளந் தூயமா
தவத்தவர் புறப்பத்து மாசு தன்னையு
முவத்தல்காய் விலாமையா லொருவி னார்களே.
(இ-ள்.)
துவர்ப்பசை நான்கொடு - குரோத
மான மாயா
லோபமென்னும் சதுஷ்கஷாயத்தோடு, தொடர்ந்த - சேர்ந்திரா நின்ற,
பத்துமாசு - (மித்தியாத்துவம், நபும்ஸகவேதம்,
ஸ்த்ரீவேதம்,
புருஷவேதம், ஹாஸ்யை, ரதி, அரதி, சோகம்,
பயம், ஜுகுப்ஸை
என்னும்) பத்துக் களங்கங்களும், (சேர்ந்து பதினாலாகிய
அப்பியந்தர
பரிக்கிரகங்களை), உவர்ப்பு - வைராக்கியமென்கிற,
நீரால் -
ஜலத்தினால், கழீஇ - பரிஹரித்து, உள்ளம்
- மனதில், தூய -
பரிசுத்தமாகிய, மா - பெரிதாகிய, தவத்தவர்
- தபத்தையுடைய
இவ்விருவர்களும், புறப்பத்து மாசு தன்னையும்
- (க்ஷேத்திரம்,
வாஸ்து, ஹிரண்யம், ஸ்வர்ணம், தனம், தானியம், தாஸீ,
தாஸன்,
குப்பியம், பாண்டம், என்னும் பாஹ்ய
பரிக்கிரகம்) பத்தையும்,
உவத்தல் - சந்தோஷித்தலும், காய்வு - த்வேஷித்தலும்,
இலாமையால்
- இல்லாத விதத்தினாலே, ஒருவினார்கள் - விட்டார்கள் (அதாவது :
நிஷ்பரிக்கிரகர்களானார்கள்), எ-று.
இங்ஙனம் கூறியதனால்,
ஸர்வஸங்கபரித்தியாகம் பண்ணினார்கள்
என்பது பெறப்படும். (160) 1208.
ஒழுக்கநீர் குளித்துடுத் தம்ப ரத்தினை
வழுக்கிலா மாதவச் சாந்து
மட்டியா
விழுக்குண மணியணி மேனி
சேர்த்தினார்
தொழிற்றொடை சீலமா மாலை சூடினார்.
(இ-ள்.) ஒழுக்கநீர்
- நல்லொழுக்கமென்னும் ஜலத்தினால்,
குளித்து - ஸ்நானஞ்செய்து, அம்பரத்தினை
- ஆகாசத்தினை,
உடுத்து - உடுத்திக்கொண்டு, வழுக்கிலா -
நழுவுதலில்லாத,
மாதவச்சாந்து - மஹாதபமாகிற சந்தனத்தை, |